- பச்சை நிறத்தில் இருப்பதால் பச்சைப் பயிறு என்று அழைக்கின்றனர். இது “பாசிப்பயிறு”அல்லது “சிறு பயிறு“என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய ,சீனா போன்ற நாடுகளில் அதிகஅளவு உற்பத்தி செய்யயப்படுகிறது.தொன்றுதொட்டு ஊன்உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- பச்சைப்பயிறு மட்டுமல்லாமல் நாம் அன்றாட உணவுகளை சேர்த்துக்கொள்ளும் பயறுவகைகளிலும் புரதசத்துக்கள், மாவு சத்துக்கள், குறைந்த அளவுகொழுப்பு சத்துக்களையும்கொண்டது. பச்சை பயறுகளில் புரதம் சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
- மற்ற தாவரங்களை விட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகக் காணப்படுகின்றன.எனவே இந்த பயிறு வகைகளை எளிதாக அதிக நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும்.
- தமிழகத்தில் அதிக அளவு உணவுகளில் பச்சைபயறுகளை பயன்படுத்திக்கின்றார்.கொழுக்கட்டை, பாயசம், கஞ்சி, பொங்கல்,போன்ற உணவுகளில் அதிக அளவிலும், சாம்பாரில் துவரம் பருப்புக்கு பதிலாக சில இடங்களை பச்சைபயறு பயன்படுத்திக்கின்றனர்.
பச்சைப்பயிறு நன்மைகள் :

- பச்சைப்பயிறு தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து , புரதச்சத்து கிடைக்கிறது. பொதுவாக பருப்பு வகைகளில் நிறைய ஊட்டச்சத்து உள்ளது, எனவே தினமும் உணவுகளில் பருப்பு வகைகளை சேர்த்து கொள்வது நல்லது.
- பாசிப்பயறில் சுண்ணாம்பு சத்து மற்றும் பொட்டாசியம் அதிக அளவு அடங்கியுள்ளது. பச்சைப் பயிறு பயன்படுத்தி சில அழகு சாதனம் செய்ய பயன்படுகிறது.
- சருமம் மற்றும் கேசம் பொலிவுடன் இருப்பதற்காக பாசிப்பயறுமாவு முகத்தில் போட்டு கொண்டால் முகம்பளபளப்பாக இருக்கும்.பாசிப்பயறுமாவு அரைத்து சோப்பிற்கு பதிலாக தேய்த்துகுளிக்கலாம். தலைக்கு தேய்த்துகுளித்து வந்தால் பொடுகுதொல்லை இருக்காது.
- உடல்எடையை குறைப்பதற்கு , உடல்எடை அதிகம் உள்ளவர்களுக்கும் சாப்பாடு சாப்பிடுவதற்கு பதிலாக சாப்பிட்டு வந்தால் உடல்எடை குறையும் .கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பிறந்தவர்களுக்கும் தாய்பால் சுரப்பதற்கும் பச்சைப்பயறு மிகவும் நல்லது.
- பச்சைப்பயரில் கால்சியம், பாஸ்பரஸ்,மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.வயிற்று கோளாறு, ஜீரண கோளாறு, பாசிப்பயறை வேகவைத்து அதன் தண்ணீரை சூப் போல குடிக்கலாம். இதேபோல பெரியம்மை மற்றும் சின்னம்மை நோய் தாக்கியவர்களும் சூப் குடிக்கலாம்.
பச்சைப்பயிறு மருத்துவ குணங்கள் :

- பச்சைப்பயிறு கண்கள் , முடி , நகங்கள் , கல்லிரல் , சருமம் போன்றவற்றைக்கு நலத்தை மேன்படுத்திக்கிறது. வேகவாய்த்த பச்சைபயறு வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தஓட்டத்தை சீராகசெயல்படும், இரத்தஅழுத்தத்தையும் கட்டுப்படுத்திக்கிறது.
- குழந்தைகளுக்கு வளரும் இளம்பருவத்தில் பச்சைப்பயிறு சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும். காலரா, மலேரியா போன்ற நோய்களுக்கும் பச்சைபயறு நல்லது.
- உடல் சூட்டைகுறைப்பதற்கும் பச்சைபயறு நல்லது, அதுமட்டும் இல்லாமல் இரத்தசோகை உள்ளவர்களுக்கும் மிகவும்நல்லது. மனத்தக்காளிகீரையோடு பாசிப்பருப்பு சேர்த்து மசியல் செய்து சாப்பிட்டால் உடலிஉஷ்ணம் ஆசனவாய் கடுப்புபோன்ற நோய்கள் குணமாகியும்.
- அரிசியோடு சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தம், மலச்சிக்கலும் குணமாகும். வல்லாரைகீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும், அத்துடன் இதுநீண்ட நேரத்திற்கு பசிஇல்லாமல்வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
தினமும் ஒரு தக்காளி – ஆரோக்கியத்தின் ரகசியம் ! தக்காளியின் அசாதாரண நன்மைகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள் தக்காளி பழத்தின் நன்மைகள், மற்றும் பயன்கள் !!
0 Comments