“ஏழைகளின் ஆப்பிள்”என்று இந்த தக்காளியை அழைப்பார்கள். நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் அதிகம் சேர்த்து சமைப்பது தாக்களி தான். இது உணவிற்கு சுவையே மட்டும் தருவது இல்லாமல் , மருத்துவ குணமும் அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிகம் குளிர்ச்சி தன்மை கொண்டது இந்த தக்காளி. தாக்களிப்பழத்தில் மூன்று வகை உள்ளது. அதில் நாட்டு தக்காளிகள் அதிகமாக சமையலுக்கும் பயன்படுத்த படுகிறது.
நாட்டு தக்காளியில் கொஞ்சம்புளிப்பு சுவையும், இனிப்பு சுவையும் கலந்து இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தக்காளியை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட இந்த தக்காளியில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது.
தாக்களிப்பழத்தில் இயற்கையாகவே பல பயன்கள் கொண்டது.இத்தாலி , பிரான்ஸ் இந்த இரண்டு நாடுகளில் அதிகமாக தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
தக்காளிப்பழத்தின் நன்மைகள்:

- உடல் எடை அதிகமாக இருக்கிறதென்று கவலை படுகிறவர்கள் தாக்களிப்பழத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
- தக்காளியில் நீர்ச்சத்து, மற்றும் நார்சத்து அதிகமாக உள்ளது. தக்காளியில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகமாக உள்ளது.
- தக்காளி தினமும் சாப்பிடுவதால்ஜீரண சக்தி அதிகரிக்கும், செரிமானம் பிரச்னைஏற்படாது மற்றும் தோல் சார்த்த நோய் வருவதை தடுக்கலாம்.
- தக்காளியில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது , எனவே ஆரோக்கியமா சர்மத்திற்க்கும் தக்காளிப்பழம் பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் , சருமத்தை சூரிய ஒளியில் இருந்து காக்கும்.
- புறஊதா கதிர்களில் இருந்தும் நம் சருமத்தை பாதுகாக்கும். எனவேமுகத்தில் சுருக்கங்கள்ஏற்படுவதை தடுக்கலாம்.முகம் பளபளப்பாகஇருக்கும்.
- தக்காளியில் மாவுசத்து , மற்றும் கலோரி குறைவாக உள்ளது , எனவேசர்க்கரை நோயாளிகள் தக்காளியை தாராளமாக சாப்பிடலாம்.மூட்டு வலி , எலும்பு தேய்மானம்போன்ற பிரச்ச உள்ளவர்களுக்கு தாக்களிப்பழத்தை தினமும் பச்சையாக சாப்பிடாமல் தக்காளிப்பழம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
- உடம்பில் புற்றுநோய் பிரச்னை வராமல் இருப்பதற்கும் தாக்களிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
- கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் தடுக்கலாம்.
- தாக்களிப்பழத்தில் வைட்டமின் கே சத்து அதிகமாக உள்ளது எனவேரத்த கசைவு , ரத்த அழுத்தம், மட்டும் ரத்த சோகை போன்ற ரத்தம் சம்மந்தப்பட்ட வியாதிகளை வருவதை தடுக்கலாம்.
- தக்காளி சாப்பிடுவதால் மாலைக்கண் நோய்,கண் சம்மந்தபட்ட பிரச்னை , மற்றும் சிறுநீர் சம்மந்தபட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கலாம்.
தக்காளியின் பயன்கள்:

- தக்காளியில் உள்ள வைட்டமின் சி சத்துக்களால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும், இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரே சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது,
- நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்.”வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, , இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், தாமிரம்,போன்ற சத்துக்கள் தக்காளியில் உள்ளன”.
- பெண்களுக்கு கர்ப்ப காலங்கள் ஏற்படும்வாந்தி , மயக்கம்போன்ற பிரச்சனைகளுக்கு தக்காளிப்பழம் ஜூஸ் சாப்பிடுவதால் இது போன்ற பிரச்னை எதுவும் ஏற்படாது.
- சிறுநீர் பிரச்சனைகளுக்குமட்டுமில்லாமல் ரத்த சோகை , கல்லிரல் பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கிறது.உடம்பில் நச்சு தன்மை வெளியேற்றபயன்படுகிறது.
- தக்காளி ஜூஸ் , மற்றும் தக்காளி சூப் போன்றவை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்உடல் சோர்வும், களைப்பும் நீங்கும். தக்காளியில்உள்ள நார்சத்தால்உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
- தாக்களிப்பழத்தை ஜூஸ் செய்து குடித்தாலோ, வேகவைத்து சாப்பிட்டாலோ , அல்லது பச்சையாக சாப்பிட்டாலோ தக்காளியில் உள்ளசத்துக்கள் நீங்காமல்நமக்கும் அப்படியே கிடைக்கும் என்பதே இதன் சிறப்பாகும்.
உங்கள் உணவுக்கு ருசியையும் ஆரோக்கியத்தையும் சேர்க்கும்
வெள்ளைபூண்டின் மருத்துவ குணங்கள் – ! 🍴🧄
0 Comments