இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலா பொருட்களில் மிளகு ஒன்றாகும். இதனை அடிப்படையாக சமைக்கப்படுவது தான் மிளகு ரசம். நமது முன்னோர்கள் காலத்திலிருந்து மிளகு ரசம் என்பது மருத்துவ பயன்பாடு கொண்ட பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது . இது சளி, காய்ச்சல், செரிமானப் பிரச்சனை போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இன்று அது அறிவியல் ரீதியாகவும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த மிளகு ரசம் சமைப்பது எப்படி என்பதை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
நம் பாரம்பரிய ரசம்

பழைய காலங்களில் வீடுகளில் மிகுந்த மருந்துகள் இல்லை . ஆனால் நம் பாட்டிமார்கள் சமையலறையில் இருந்ததை வைத்தே சளி, இருமல், வயிற்று வலி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர். அதில் மிளகு ரசம் என்பது மிகவும் முக்கியமானது . இதை சாப்பிட்ட உடனே உடல் நிம்மதியடையும்.
மிளகு ரசம் நம் பாரம்பரிய ரசம் என அழைக்கப்படுவதற்கான முக்கியக் காரணம், இது நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த, இயற்கை மருத்துவக் குணங்கள் கொண்ட ஒரு சத்தான உணவாக இருப்பதுதான். மிளகு, சீரகம், பூண்டு போன்ற மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ரசம், சளி, காய்ச்சல், ஜீரணக் கோளாறு போன்ற உடல்நலக் கோளாறுகளை சீர்செய்யும் இயற்கை மருந்தாகவே விளங்குகிறது, மேலும் இது நம் கலாச்சார சமையல் மரபை பிரதிபலிப்பதாலும், ஒரு எளிய உணவாக இருப்பதாலும் “நம் பாரம்பரிய ரசம்” என அன்புடன் அழைக்கப்படுகிறது.
மிளகு ரசத்திற்கு தேவையான பொருட்கள்

- மிளகு
- பூண்டு
- தக்காளி
- மஞ்சள் தூள்
- சீரகம்
- புளி
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- உப்பு
செய்முறை
முதலில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவற்றை சிறிதளவு இடித்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புளியை கரைத்து அதில் மஞ்சள்தூள், உப்பு, தக்காளி, இடித்த மசாலா கலவை சேர்த்துக் கொள்ளவும். இதனை அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும். ரசத்தின் வாசனை வரும் வரை மட்டும் கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை ரசத்தில் சேர்த்து கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து மூடி வைத்து 2 நிமிடங்கள் வைக்கவும். இப்போது சுவையான மிளகு ரசம் தயார்.
இதை சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கியமும், மனதுக்கு நிறைவும் தரும்.
Buy now: “உணவின் சிறந்த துணை – இயற்கை வளம் கொண்ட இடுக்கி மிளகு!“
மிளகு ரசம் தரும் நன்மைகள்
1.செரிமானத்திற்கு உதவுகிறது :
மிளகும் பூண்டும் சேரும் போது பித்த சுரப்பை தூண்டி, செரிமானத்தை அதிகரிக்கின்றன. இதனால் பசியை தூண்டுகிறது.
2.குரல் பிரச்சனையை சீராக்கும்:
குளிர் காலத்தில், குரல் பிரச்சனை அல்லது இருமல் ஏற்படும் நேரங்களில் இது ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது .
3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:
மிளகில் உள்ள பைபரின் என்ற இயற்கை வேதியியல் பொருள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கிறது.
4. உடல் வெப்பத்தைக் குறைக்கும்:
மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலிகள் போன்றவற்றில் மிளகு ரசம் ஒரு இயற்கை மருந்தாகும். அதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றுகின்றன.
5. குடல் சுத்தம்:
மிளகு ரசத்தில் உள்ள சீரகம், பூண்டு போன்ற செரிமான பொருட்கள் குடலைச் சுத்தம் செய்து, கழிவு சரிவர வெளியேற உதவி செய்கின்றன.
6. உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது:
மிளகில் உள்ள தன்மை, உடல் கொழுப்பை குறைக்கும் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டுவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.
7. மன அழுத்தத்தை குறைக்கும்:
இதை சூடாக பருகும் போது, அது மனதை அமைதியாக்கும். அதன் வாசனை, சுவை மற்றும் மூலிகைத் தன்மை மூன்றும் மன அழுத்தத்தைத் குறைக்கின்றன.
மருத்துவ ரீதியான பார்வை:
மிளகு ரசத்தில் உள்ள பொருட்களில் பெரும்பாலானவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி-இன்ஃபிளமட்டரி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்டவை. இவை நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கி, உடலின் சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதாக மருத்துவர்கள் கருதுகின்றன. குறிப்பாக, இயற்கை மருத்துவத்தை ஆதரிக்கும் சித்தர்கள் மற்றும் ஆயுர்வேத நிபுணர்கள், இதனை தினசரி உணவில் சேர்க்க பரிந்துரைக்கின்றன.
குறிப்பு:
மிளகு ரசம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது, ஆனால் மிக அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு முறை (மதியம் அல்லது இரவு) பருகுவது நல்லது.
மிகுந்த அளவில் மிளகைச் சேர்ப்பது, பித்த அதிகரிப்பு, இரைப்பையில் புண் அல்லது எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே அளவோடு பயன்படுத்துவது அவசியம்.
முடிவுரை
மிளகு ரசம் என்பது சுவையிலும், மருத்துவ நன்மையிலும் சிறப்பாக விளங்கும் நம் பாரம்பரிய உணவாகும். இது உணவு மட்டுமல்ல, அது நம் வீட்டில் உள்ள சிறந்த மருந்தாகும். இயற்கை மருத்துவ முறையில் மருந்தில்லாமல் பல நோய்களுக்கு தீர்வு தரும் திறன் கொண்டது. இன்று உலகம் முழுவதும் இயற்கை சிகிச்சைகள் பிரபலமாவதற்கேற்ப, நம் பாரம்பரிய மிளகு ரசத்தின் மதிப்பும் உயரும். எனவே நம் முன்னோர்கள் வளர்த்த பாரம்பரியத்தை பாதுகாத்து, அதன் நன்மைகளை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சிறிய, ஆனால் முக்கியமான முயற்சி இதுவாகும்.
மேலும் அறிய : மிளகு ரசம்
0 Comments