தமிழர்கள் சமையலில் வெந்தயம் சுவைப்பொருளாக பயன்படுத்துகின்றனர். இதன் செடி வெந்தய கீரையாக உண்ணப்படுகிறது. வெந்தயக் குழம்பு, புளி குழம்புக்கு பயன்படுகிறது. கசப்பு தன்மை இருந்தாலும், சமையலுக்கு சிறந்த சுவை அளிக்கிறது. ஈரமான மண்ணில் விரைவாகவும் எளிதாகவும் வளரும் செடியாகும்.
வெந்தய விதை அதிக அளவு மருத்துவ குணங்களை பெற்ற இயற்கையான மூலிகை பொருளாகும். எனவே எல்லாம் சமையலிலும் இதை கட்டாயம் சிறிதளவு சேர்த்து கொள்வது நல்லது.
Related : முருங்கைக்காய், மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகள்
வெந்தயத்தின் நன்மைகள்:

- புரதச்சத்து
- நீர்ச்சத்து
- மாவுச்சத்து
- கொழுப்புச்சத்து
- சோடியம்
- இரும்புச்சத்து
- பொட்டாசியம்
- தாது பொருட்கள்
- ரிபோபிளேவின்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- சுண்ணாம்புச்சத்து
போன்ற சத்துக்கள் வெந்தயத்தில் அடங்கியுள்ளது. Related : பீட்ரூட்டின் நன்மைகள், மற்றும் மருத்துவ குணங்கள்
- பொதுவாக வெந்தயம் என்பது நல்ல ஒரு பாலுணர்வு கொண்டது. குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கு, முக்கிய பங்கு வைக்கிறது.
- அதுமட்டும் இல்லாமல், கர்ப்ப காலங்களில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உடலுக்கு, பிரசவத்துக்கு நல்லது.
- இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெந்தயம் குறைக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.
- பெண்களுக்கு முகப்பொலிவு பெறுவதற்கு வெந்தயத்தை ஊறவைத்து, நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவினால் முகப்பொலிவாக இருக்கும், முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
- வெந்தயம் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுவலி மற்றும் செரிமானப்பிரச்சனையைக் குறைக்க வெந்தயத்தை காலையில் சாப்பிடலாம்.
- உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க விரும்புவோர், வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடலாம்.
- இதனால் உடல்கொழுப்பு குறையவும் உடல் எடை தடையின்றி குறையவும் உதவும்.
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்:

- சர்க்கரை நோயாளிகளுக்கும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளுக்கும் வெந்தயம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- வெந்தயத்தை தினமும் நான்கு அல்லது ஐந்து வெந்தயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது.
- வெந்தயம் உடல் குளிர்ச்சிக்கு நல்லது. உடல் சூட்டால் வயிற்றுவலி ஏற்படும் அதற்கு வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதை மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு, வயிற்றுவலி குறையும்.
- மாரடைப்பு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்க்க வேண்டும், பின்னர் ஆறியவுடன் குடிக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதனை பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளை குறைக்க உதவும்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி , உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்தாகும்.
- எனவே பெண்கள் உணவில் வெந்தயத்தை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது. முடி அடைதியாக வளர்வதற்கும், கருமையான கூந்தலுக்கு இது நல்லது. தலைமுடி வளர்வதற்கு தேங்காய் எண்ணையுடன் வெந்தயத்தை சேர்த்து ஊறவைத்து தலையில் தேய்த்தால், முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
- மேலும் வெந்தயத்தில் ஒரு மனமுடைய எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவை சென்ட் மற்றும் நறுமண பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
சின்ன வெங்காயத்தின் அற்புத நன்மைகளை உங்கள் வாழ்வில் சேர்க்கத் தயாரா? அறிய இங்கே வருக!”
0 Comments