முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகளும், முருங்கை மரத்தில் இருந்து இந்த காய் வருவதால் இதற்கு முருங்கைக்காய் என்று பெயர் பெற்றது. முருங்கை காய் மட்டும் இல்லாமல் முருங்கை இலைகள் , பூக்கள் போன்றவை உணவாக பயன்படுகிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் , கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர்.பொதுவாக முருங்கை மரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. எளிதில் உடைய கூடியது இதன் கிளைகள். முருங்கைக்காய் ஆந்திரா , கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுகிறது. அனைத்து வகை மரங்களிலும் வளரக் கூடியது இந்த முருங்கைமரம். முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகளும் வறண்ட , வெப்பம் அதிகம் உள்ள இடங்களிலும் ,பாசன வசதி குறைவாக உள்ள இடங்களிலும் வளரக்கூடியது. பெரிய அளவில் கவனிப்பு இல்லாமலே வளரக்கூடியது.
Related : பச்சைப் பயிறு நன்மைகள், மருத்துவ குணங்கள்
முருங்கைக்காய், முருங்கை இலை நன்மைகள் :

Related : தக்காளி பழத்தின் நன்மைகள், மற்றும் பயன்கள்
- முருங்கைக்காய் பொதுவாக நீளமாக, ஒரு மீட்டர் நீளத்திற்கு அளவுக்கு வளரக்கூடியது. தமிழ் நாட்டில் முருங்கைகாய் குழப்பு , முருங்கை பிரட்டல், முருங்கை கீரை பொரியல் போன்று விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள்.
- பழங்காலத்தில் முருங்கை இலைகளை மூலிகை பொருளாக பயன்படுத்தப்பட்டது. வைட்டமின்பி , சி , கே, மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. ஊட்டச்சத்து , கால்சியம், பாஸ்பரஸ், இருப்புச்சத்து , தாதுக்கள் அதிகமாக முருங்கைகாய் மற்றும் முருங்கை கீரையில் உள்ளது.
- முருங்கை இலைகளை உணவு பொருளாக மட்டும் இல்லாமல் ,எரிபொருளாகவும், கால்நடை உணவு , உரம் மற்றும் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்த படுகிறது. முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்களை கொண்டது.
- முருங்கை இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யவும், ரத்த அளவை அதிகரிக்கவும்,சிறுநீர் சுத்தம் செய்கிறது.
Digiocraft Proshot V4 Teleprompter for iPhone, Ipad, Smartphone, DSRL Camera with Remote Control
முருங்கைக்காய், முருங்கைக்கீரையின் மருத்துவ குணங்கள்:

ALOXE Cosmetic Organizer Box Drawers Storage Plastic Stationary Box
- முருங்கை இலை வேகவைத்து அதன் சாற்றை குடித்தது வந்தால் உடல் சூடு குறையும். அது மட்டும் இல்லாமல் இந்த இலைகளை நெய்யும் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்தம் அதிகரிக்கும்.
- முருங்கைகாயில் அதிகம் இருப்பு சத்து இருப்பதால், வயிற்று வலி, தலைவலி , வயிற்றுப்புண் ஆகிய வியாதி இருப்பவர்களுக்கு தினமும் முருங்கைக்காய் சாப்பிடலாம்.
- கண் நோய்,மலச்சிக்கல் போன்ற நோயாளிகளுக்கும் இவை நல்லது.
- எலும்புகள் வலிமையுடைய, குழந்தைகளின் எலும்புகளுக்கு ஆரோக்கியம் மேம்படவும் முருங்கைக்காய் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் முருங்கை கீரை உதவுகிறது.
- பசியின்மை பிரச்னை உள்ளவர்களுக்கும், உணவுசெரிமானம் ஆகாமல் இருப்பவர்களுக்கும், முருங்கைக்காய் அல்லது முருங்கைக்கீரை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் நல்லது. பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கும் நன்றாக பசி எடுக்கும்.
- முருங்கைக்காய், அல்லது முருங்கை இலை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் , மூட்டு வலி குணமாகும்.
- ஆண் , பெண் இருபாலருக்கும் மலட்டு தன்மை இருந்தால் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
- நீளமா முடி வளர்ச்சிக்கும் , நரை முடி , தோல் நோய் , தலை வலி ஆகிய பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உள்ளது.
- கர்ப்பப்பை குறைபாடு ஏதேனும் இருந்தாலும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் முருங்கைக்கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Related : பூண்டின் மருத்துவ குணங்கள்
முக்கிய குறிப்புகள்:
- முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்தால், ஆரோக்கியம் மேம்படும்.
- மருத்துவர் ஆலோசனையுடன் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் சாப்பிடுவது நல்லது.
இயற்கையின் வரப்பிரசாதம் முருங்கையை உண்ணி, ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்குங்கள்!
0 Comments