மனிதனின் மூளைக்கு மிகச் சிறந்த வலிமை தரக்கூடியது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரி என்பது ஒரு கொடி வகைகளை சார்ந்தது. சீனாவில் வெள்ளரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இது பச்சையாக சாப்பிடக்கூடிய ஒரு காய் வகையாகும். வெள்ளரிக்காய் விட அதன் பிஞ்சு கொஞ்சம் சுவை அதிகமாக இருக்கும்.( வட இந்தியர்கள் வெள்ளரிக்காயை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்).
Redmi 80 cm (32 inches) F Series HD Ready Smart LED Fire TV L32R8-FVIN (Black)
வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்:

- சோடியம்
- மக்னீசியம்
- இரும்பு
- சிலிகான்
- குளோரின்
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- கந்தகம்
- பொட்டாசியம்
- தாதுப்பொருட்கள்
- நீர்ச்சத்து
- நார்சத்து
Related:ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்
வெள்ளரிக்காயின் நன்மைகளும் அதன் மருத்துவ குணங்களும் :

- நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க செய்கிறது, குழந்தைகளுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் மிக வேகமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வதற்கு தினமும் ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிடுவது நல்லது.
- வெயில் காலங்களில் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்கும், உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கும், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கும் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது.ஈரல் , கல்லீரல் இவற்றின் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.
- வெள்ளரிக்காயில் அதிக அளவில் நீர்சத்து உள்ளதால் , நம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.பசி அதிகரிக்கவும், நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. Xiaomi 164 cm (65 inches) X Pro QLED Series Smart Google TV L65MA-SIN (Black)
- இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க செய்கிறது. இரத்தசோகை குறைகிறது, மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து , உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கும் உடல் எடை குறைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
- முக பொலிவுக்கு, தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கும், பலருக்கு கண்களுக்கு கீழே கருவளையங்கள் உண்டாகும், இவற்றைத தவிர்க்க வெள்ளரி ஒரு நல்ல மருந்தாகும்.
- கண் பார்வை தெளிவாக இருப்பதற்கும், உடல் வெப்பம் அதிகரித்து கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்.
- வெள்ளரிக்காயில் உள்ள நார்சத்து நாம் உண்ணும் உணவு செரிமான சக்தியே மேம்படுத்தவும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவும்.
- தினமும் வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவதால் வாய் துர்நாற்றம் வராமலும் தடுக்கலாம். மேலும் வெள்ளரி விதைகள் வாய் புண் வராமல் பாதுகாக்கிறது.
- நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், பெண்களுக்கு முடி வளர்ச்சியே அதிகரிக்க செய்கிறது, முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- புற்றுநோய் எதிர்ப்பு சக்தி வெள்ளரிக்காயில் அதிகம் உள்ளது, கருப்பை , மார்பகம் , இரைப்பை தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கிறது.தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து, சிறுநீரகத்தில் கழுவுகள் தேங்காமல் பாதுகாக்கிறது.
- சிறுநீரக சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் நேராமல் தடுக்கிறது.இரத்த ஓட்டத்தை சேர்க்கவும் மேலும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வெள்ளரிக்காய் தினமும் சாப்பிடுவது நல்லது.
0 Comments