ஏலக்காயின் பயன்கள், ஏலக்காய் என்பது மசாலா பொருட்களின் “ராணியாகும்”. இது ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. ஏலக்காய் உணவில் அதிக சுவையே ஏற்படுத்திக்கிறது, எனவே அதிக அளவில் சமையலுக்கு பயன்படுகிறது. ஏலக்காய் குறிப்பாக இந்தியாவில் தென்மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிக அளவு நுகரப்படுகிறது, இந்தியாவில் 60% உற்பத்தி கேரளாவில் உற்பத்தி செய்கின்றனர். ஏலக்காய் சமையலுக்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் இயற்கையாகவே பல மருத்துவைத் தன்மை கொண்டது.
ஏலக்காய் செடி பாத்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்! | Our Cardamom and Pepper Plantation Tour Tamil
மசாலாக்களின் ராணியான ஏலக்காவின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்
ஏலக்காயின் பயன்கள், ஏலக்காயில் இரண்டு வகை உள்ளது, அவை கருப்பு ஏலக்காய் மற்றும் பச்சை ஏலக்காய்.
- புரதம்
- நார்ச்சத்து
- மற்றும்
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- இரும்புச்சத்து
- தாது உப்புக்கள்
போன்றவை ஏலக்காவில் அதிகம் உள்ளது.
கருப்பு ஏலக்காய் :

- கருப்பு ஏலக்காய் என்பது வீரியமிக்க வாசனையுடன் விளங்கும், ஒரு சிறிய செடியாகும். கருப்பு ஏலக்காய் தான் புகழ் பெற்ற வாசனை பொருளாகும்.
- கருப்பு ஏலக்காயில் வைட்டமின்கள் B1, B2, B3, A போன்ற மருத்துவ குணம் கொண்டது. கருப்பு ஏலக்காய் பச்சை ஏலக்காயை விட பெரியதாக இருக்கும்.
- கருப்பு ஏலக்காயில் இருந்து எடுக்கின்ற எண்ணெய் பல மருத்துவ குணங்களுக்கும், அழகு பராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்த படுகிறது. கருப்பு ஏலக்காய் தான் உலகிலேயே 3 வது விலையுயர்ந்த மசாலா பொருளாக உள்ளது.
Related : பீட்ரூட்டின் நன்மைகள், மற்றும் மருத்துவ குணங்கள்
கருப்பு ஏலக்காய் மருத்துவ குணங்கள்:

- ஏலக்காய் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- மார்பு சளியால் அவதி படுபவர்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- ஏக்காய் பற்களில் உள்ள கிருமிகளை நீக்கிவாய் துர்நாற்றத்தை போக்கி வாய்க்கு புத்துணர்ச்சி தருகிறது.
- செரிமானம் பிரச்னை உள்ளவர்கள் கருப்பு ஏலக்காய் மற்றும் மிளகு இரண்டையும் பொடி செய்து அதை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் செரிமானம் பிரச்னை இருக்காது.
- கருப்பு ஏலக்காய் தினமும் உணவுடன் ஒருவேலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும், மற்றும் ரத்தம் உறைவதை தடுக்கலாம்.
- கருப்பு எலக்கையில் உள்ள ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் மார்பகம் புற்றுநோய் தடுக்க உதவுகிறது.
- மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கருப்பு ஏலக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள ஆல்ககால் அளவை குறைகிறது. Related : முருங்கைக்காய், மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகள்
- கருப்பு எலக்கையுலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. இது கடுமையான தலைவலியை நீக்கி, உடனடி நிவாரணம் அளிக்கும். இந்த எண்ணெயே பயன்படுத்தும்போது மனம் அழுத்தம் மற்றும் சோர்வை போக்கவும் பயன்படும்.
- கருப்பு ஏலக்காய் ஏலக்காய் சாப்பிடுவதால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.
- வயதான தோற்றம் சீக்கிரம் வருவதை தடுப்பதையும் சேர்த்து, சருமம் வெண்மையாக மாறுவதற்கும் கருப்பு ஏலக்காய் உதவி புரிகிறது. சரும அலர்ஜிக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பச்சை ஏலக்காய் :

Digitek® (DWM 101 Wireless Microphone System with ANC Noise Reduction, 360° Sound Capture
ஏலக்காயின் பயன்கள், கருப்பு ஏலக்காயை விட பச்சை எலக்கையை பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுகிறது. பொதுவாக இனிப்பு மற்றும் பலகாரகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பச்சை ஏலக்காவில் ஓடு மிக வலுவாக இருப்பதால், அதன் உள்ளே இருக்கும் விதைகளின் மணம் மாறாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
பச்சை ஏலக்காவின் மருத்துவ பயன்கள்:

வைட்டமின் ஏ, பி, சி, நியாசின், ரிபோப்ஃளேவின்ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கக் கூடியவை.
Related : பச்சை மிளகாய் தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
- மகப்பேருக்குப் பிறகு இதைப் பெண்கள் அதிகம் பயன்படுத்தலாம். நெஞ்சு சளி , வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பச்சை ஏலக்காய் பொடியாய் அரைத்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் டீ , காப்பியுடன் கலந்து குடித்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- பச்சை ஏலக்கையில் இருக்கும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உடலில் இருக்கும் செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுத்து இளமையாக வைத்துக்கொள்ளும்.
- பல் வலி இருப்பவர்களுக்கும், பல் கரை, பல் சொத்தை இருபவர்களுக்கும், வாய் சார்ந்த பிரச்னை இருப்பவர்களுக்கு பச்சை ஏலக்காய் மருந்தாக பயன்படுகிறது.
- தொண்டை அடைப்பு, தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கும், பச்சை ஏலக்காய் அதனுடன் சுக்கு சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் இதன் பிரச்சனைகள் நீங்கும்.
- பெண்களுக்கு மலட்டுதன்மை மற்றும் ஆண்களுக்கு விந்து வெளிப்படுத்தலில் பிரச்னை இருந்தால் பச்சை ஏலக்காய் மிகவும் நல்லது. (ஆண்கள் அதிக அளவில் பச்சை ஏலக்காய் சாப்பிடவும் கூடாது, அதிகம் சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு ஏற்படும்)
- ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஜலதோஷம், இருமல் , தும்மல் ஆகிய பிரச்னை தொடர்ச்சியாக உள்ளவர்கள் பச்சை ஏலக்காய் தினமும் வெந்நீரில் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்கலாம். Samsung 189 cm (75 inches) D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV
- சுவாச கோளாறு , ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏலக்காய் மிகவும் நல்லது.
- கர்ப்பிணி பெண்களுக்கும் அடிக்கடி ஏற்படக்கூடிய பிரச்னைகளில் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வாயில் 1 ஏலக்காய் போட்டு கொண்டாள் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
- ஏலக்காயில் எடுத்த எண்ணெய் சரும பளபளப்பாக இருப்பதற்கும், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்யவும் பயன்படுகிறது.
ஏலக்காய் செடி பாத்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்! | Our Cardamom and Pepper Plantation Tour Tamil
0 Comments