Free   Shipping   On   Orders   Above    1500 !!

உலகளாவிய உணவு வகைகளில் ஏலக்காய் 

by | May 26, 2025 | Cardamom | 0 comments

உலகளாவிய உணவுகளில் ஏலக்காய்

உணவு என்பது உலகம் முழுவதும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் ஒரு அற்புத மந்திரம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் உணவுகளின் மூலம் தங்களது அடையாளங்களை உருவாக்கி வருகின்றன. இந்த உணவுகளில் எண்ணற்ற மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சில தான் எல்லா நாட்டினரும் பயன்படுத்தும் ஒரு பொது பங்காக இருந்து வருகின்றன. அந்த வகையில் வாசனை, சுவை, மருத்துவ குணம் எனப் பல அம்சங்களை கொண்டது தான் ஏலக்காய் உணவுகள்.

பல ஆண்டுகளாகவே ஏலக்காய் உலக உணவுகளில் முக்கியத்துவம் பெற்றது. இந்தியா, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா எனப் பல நாடுகளில் உணவுப் பதார்த்தங்களில் ஏலக்காய் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இக்கட்டுரையில் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏலக்காயின் வரலாறு மற்றும் வகைகள் 

ஏலக்காய் பழமையான மசாலாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியா மற்றும் இலங்கையில் இருந்தே அதிகமாக கிடைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள், கிரேக்கம், பண்டைய எகிப்து போன்ற நாடுகளில் இதன் பயன்பாடு பதிவாகியுள்ளது.

ஏலக்காயில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

ஏலக்காயின் வகைகள்
1. பச்சை ஏலக்காய்:

இது மிகவும் வாசனைமிக்க, சற்று இனிப்புச் சுவையுடையது ஆகும். இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பாலும் இது உணவுகளிலும், இனிப்பு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

2. கருப்பு ஏலக்காய்:

இது சற்று கடுமையான வாசனை கொண்டது. இது சாதாரணமாக குழம்புகள் மற்றும் காரமான உணவுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

3. வெள்ளை ஏலக்காய்:

பொதுவாக, பச்சை ஏலக்காயை சூரியனில் உலர்த்தி அல்லது வேறு முறையில் பச்சை நிறம் போக்கி, வெள்ளை நிறம் ஏற்படுத்துவதால் இது “வெள்ளை ஏலக்காய்” எனப்படுகிறது. இது வாசனையில் சற்று மெல்லியதாகவும், சுவையில் குறைவாகவும் இருக்கும். இது மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயம் மற்றும் ஏற்றுமதி

  • ஏலக்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக தெற்கிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஏலக்காய் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் மலை பகுதிகளில் அதிக மழை மற்றும் ஈரப்பதம் உள்ளதால், ஏலக்காய் செடி நன்கு வளர்கிறது.
  • ஏலக்காய் வளர்க்கும் விவசாயிகள் இது மூலமாக நல்ல வருமானம் சம்பாதிக்கிறார்கள். சிறு நிலத்தில் கூட ஏலக்காய் வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும். ஏலக்காய்க்கு இந்தியாவிற்குள் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் பெரிய தேவை இருக்கிறது.
  • இந்தியாவில் உற்பத்தியாகும் ஏலக்காயின் ஒரு பெரிய பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளுக்கு ஏலக்காய் அனுப்பப்படுகிறது.

Shop now: உண்மையான தரம் கொண்ட இடுக்கி ஏலக்காய் உங்களுக்கு வேண்டுமா? இப்போதே ஆர்டர் செய்யுங்கள்!

உலக நாடுகளில் ஏலக்காயின் பயன்பாடு

1. இந்தியா
இந்திய உணவில் ஏலக்காய்

இந்திய சமையலில் ஏலக்காய்  தவிர்க்க முடியாத மசாலா பொருளாகும்.

பிரியாணி: எண்ணெயில் முதலில் ஏலக்காயை சேர்ப்பதால்  சுவை மற்றும் வாசனை இரண்டும் கூடும்.

பாயசம் மற்றும் இனிப்புகள்: இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது முந்திரி, திராட்சை உடன் ஏலக்காயும் சேர்ப்பதனால் சுவை அதிகரிக்கிறது.

குலுக்கி டீ (Masala Tea): பால், இஞ்சி, மிளகு, தேயிலை ஆகியவற்றுடன் ஏலக்காய் சேர்த்து ஒரு சுவையான தேநீர் தயாரிக்கப்படுகிறது.

வாய்வாசனை: உணவுக்கு பிறகு ஏலக்காயை மென்று சாப்பிடுவதால் வாய்வாசனை நீங்குகிறது.

பானங்கள்: பானகம் தயாரிக்கும் போது ஏலக்காய் சேர்ப்பதினால் வாசனையை அளிக்கிறது.

மருத்துவ நோக்கங்கள்: இந்திய சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது.

2. அரபு நாடுகள் 
உலகளாவிய உணவுகளில் ஏலக்காய்

அரபு நாடுகளில், ஏலக்காய் ஒரு மரியாதையான வாசனை பொருள்.

Qahwa: இது அரபு நாடுகளில் பிரபலமான காபி பானம். இதில் ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

விருந்தினர் மரியாதை: வீட்டிற்கு வருகிற விருந்தினர்களுக்கு ஏலக்காயுடன் கூடிய சாய் அல்லது காபி பரிமாறப்படுவது மரபு.

பண்டிகை உணவுகள்: பிறந்த நாள், திருமண விழா, பூஜைகள் போன்றவைகளில் ஏலக்காய் கலந்த ஃபிரைடு ரைஸ், இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

இனிப்புகள்: Halwa, பிஸ்கட்டுகள் போன்ற இனிப்புகளில் வாசனைக் கூட்டுதலுக்கு ஏலக்காய் முக்கியமாக பயன்படுகிறது.

3. ஈரான் மற்றும் துருக்கி 
உலகளாவிய உணவுகளில் ஏலக்காய்

Baklava (பக்லவா): பாதாம், பிஸ்தா, தேன் ஆகியவற்றுடன் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பில், ஏலக்காய் வாசனையை உயர்த்துகிறது.

Rice Pudding (ஷீர்குர்மா போன்றவை): பால் சாதத்தில் ஏலக்காய், சாக்லெட், தேன் சேர்த்து வாசனை தரப்படுகிறது.

Sutlac (துருக்கி): பால், அரிசி, சர்க்கரை கலந்த இனிப்பு கஞ்சி. இதில் ஏலக்காய் சேர்க்கப்படுவது வழக்கம்.

Herbal Tea: பசுமை தேநீர்(Green tea), துளசி, சினமன் போன்ற மூலிகைகளுடன் ஏலக்காய் சேர்த்து பருகப்படுவது இயற்கை மருந்தாக கருதப்படுகிறது..

4. ஐரோப்பிய நாடுகள் 

ஸ்வீடன் மற்றும் நார்வே: இங்கு ஏலக்காயுடன் “Cardamom Buns”, “Semla” போன்ற இனிப்பு ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

ஃபின்லாந்து: அங்குள்ள மக்கள் பனிக்காலங்களில் ஏலக்காயுடன் கூடிய வெந்நீர் அல்லது கோழி சூப்புகளை பருகுவார்கள்.

கிறிஸ்துமஸ் கேக்: கிருஸ்துமஸ் சீசனில் செய்யப்படும் கேக்குகளிலும் வாசனைக்கு ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

Glogg: ஸ்வீடிஷ் வெந்நீர் பானத்தில் ஏலக்காய், சினமன் சேர்க்கப்படும்.

5. அமெரிக்கா 
உலகளாவிய உணவுகளில் ஏலக்காய்

Chai Latte: இந்திய மசாலா டீயின் மேம்பட்ட வடிவமாக அமெரிக்காவில் பரவி வந்தது. இதில் ஏலக்காய் முக்கிய வாசனை பொருள்.

Pumpkin Spice Mix: குளிர் காலத்தில் பயன்படுத்தும் வாசனை கலவையில் ஏலக்காய் முக்கியமான அங்கமாகும்.

Cookies & Muffins: ஏலக்காயுடன் கூடிய Cardamom cookies, muffins சிறப்பு சுவையுடன் பரிமாறப்படும்.

Mouth Freshener: பலர் டாப், காம்ப் போன்ற முன்னனி உற்பத்தியாளர்களும் ஏலக்காய் பவுடர் சேர்க்கிறார்கள்.

6. சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள்

சீன பாரம்பரிய மருத்துவம்: ஏலக்காய் உடல் சூட்டை சமநிலைப்படுத்தும் என நம்பப்படுகிறது. ஜீரண சிக்கல்கள், வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மூலிகை தேநீர்: சிறிய  குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஏலக்காய் தேநீர் பருகும் பழக்கம் உள்ளது.

சூப் வகைகள்: தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாட்டில் நண்டு, மீன் சூப்பில் வாசனைக்காக ஏலக்காய் சேர்க்கப்படுகிறது.

வாடி உணவுகள்: ஹோட்டல் மற்றும் வீட்டு விருந்து உணவுகளில் வாசனைக்கு ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.

பண்டிகைகள் மற்றும் பாரம்பரியத்தில் ஏலக்காய்

நம் தமிழ் மக்கள் தீபாவளி, பண்டிகை காலங்களில் செய்யும் பலகாரங்களில் ஏலக்காயை முக்கியமாக சேர்க்கிறார்கள்.

பாயசம், சர்க்கரை பொங்கல், மிட்டாய் வகைகள் எல்லாம் வாசனை மிகுந்த ஏலக்காயுடன் தான் சிறப்பு பெறுகின்றன.

சிலர் இது நல்ல நேரத்தை தரும் மூலிகை என்றும் நம்புகிறார்கள்.

சமையலில் ஏலக்காயின் முக்கியத்துவம்

  • ஏலக்காய் சிறிது மட்டுமே போதுமான வாசனை தரும்.
  • சுவைக்கு இனிமை தரும்.
  • இனிப்புக்கும், காரத்துக்கும் பயன்படுத்தக் கூடியது.
  • மற்ற மசாலாவுடன் கலந்து சுவையை உயர்த்துகிறது.

சுருக்கம் 

ஏலக்காய் என்பது வெறும் ஒரு மசாலா அல்ல, அது ஒரு சக்தி வாய்ந்த மூலிகை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில், மக்கள் இது தரும் வாசனை, சுவை, நன்மைகளை உணர்ந்துள்ளனர்.

இது உடல் நலத்துக்கும் நல்லது, சமையலுக்கும் நன்மை தரும். இன்று இயற்கை உணவுகள் முக்கியத்துவம் பெறும் காலத்தில், ஏலக்காய் போன்ற பாரம்பரிய பொருட்களை நாம் மேலும் மதித்து பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் தினசரி சமையலில் சிறிதளவு ஏலக்காயை பயன்படுத்துவதால் நம்முடைய உணவும், உடலும் மகிழ்வாக மாறும்.

ஏலக்காய் உணவு வகைகள் பற்றி மேலும் அறிய…

Written By Santhiya Promoth

undefined

Related Posts

வெயிலில் சுகம் தரும் 5 ஏலக்காய் பானங்கள்

வெயிலில் சுகம் தரும் 5 ஏலக்காய் பானங்கள்

வெயிலின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடலின் நீர் சுரப்பு அதிகரித்து, உடல் சோர்வு, நீரிழப்பு, தலையிளக்கம், ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இயற்கை மூலிகைகள் கொண்ட பானங்கள் உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை....

read more
ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

பாரம்பரிய இந்திய மருத்துவத்தில், இயற்கை மூலிகைகளும் மசால் பொருள்களும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அவை உணவில் சுவையையும், உடலில் ஆரோக்கியத்தையும் சேர்க்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில், ஏலக்காய் ஒரு சிறப்பான தாவர மூலிகையாக பார்க்கப்படுகிறது. இதன்...

read more
ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

இந்தியாவின் சமையல் கலாச்சாரம், மருத்துவ துறை மற்றும் வாசனைபொருள் உற்பத்தியில் ஏலக்காயின் பங்கு மிக முக்கியமானது. “மசாலா பொருட்களின் ராணி” என்று அழைக்கப்படும் ஏலக்காய், சிறிய விதையாக இருந்தாலும் உலகளாவிய சந்தையில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *