மிளகின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களும், மிளகு ‘பைப்பரேசியே’ என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது.“கருப்பு மிளகு வாழ் மிளகு” என இரு வகை உண்டு. “மிளகு கருப்பு தங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. கருப்பு மிளகைய் உலரவைத்து நறுமண பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவை அதிகரிக்க செய்யும் பொருளாகவும் மிளகு உலகெமெங்கும் பயன்படுத்த படுகிறது. மிளகின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களும், மிளகு அதிக அளவில் தென்மேற்கு தொடச்சி மலைகளில், கேரளாவில் வேளாண்மை செய்கின்றனர்.
கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மிளகு

தமிழ்நாட்டில் அதிக அளவு சமையலுக்கு மிளகு பயன்படுத்த படுகின்றது. அஞ்சரைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்த கருப்பை மிளகு, “ரசம், சாம்பார், புளிக்குழம்பு, கோழி மிளகு வறுவல், உருளைக்கிழங்கு மிளகு வறுவல், காளான் மிளகு வறுவல், வெண் பொங்கல், வடை, பருப்பு குழம்பு”, போன்ற எண்ணற்ற வகை சமையலுக்கு மிளகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மிளகு உணவில் அதிக சுவைக்கு மட்டும் பயன்படுத்தாமல் எண்ணற்ற நோய்களை குணப்படுத்துவதற்கும் முலைக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
Related : உலர்திராட்சை நன்மைகள் அதன் மருத்துவ குணங்கள்
மிளகின் நன்மைகள்

மிளகில் பைபரின் என்கிற “வேதிப்பொருள்”இருப்பதால் மிளகு காரமான சுவை உள்ளன.“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்பது பழமொழி…
- பொட்டாசியம்
- வைட்டமின்
- நார்சத்து
- மக்னீசியம்
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- கரோரிகள்
- சோடியம்
- தாமிரம்
மிளகின் கொடி, இலை, மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களுக்கும்.
- உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.
- செரிமானத்தை சீர் செய்ய உதவுகிறது, அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்கிறது.
- தொண்டை பகுதியில் உள்ள வீக்கத்தை குறைப்பதற்கும் மிளகு ஒரு இயற்கையான மருந்தாகும்.
- மிளகில் காரசத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கிருமிகளை அழித்து, தொற்று நோய்கள் எதுவும் வராமல் நம்மளை பாதுகாக்கிறது.
- நாம் அன்றாட உணவில் உள்ள அனைத்து ஊட்ட சத்துக்களும் சீராக ஈர்த்து உடலில் கலப்பதற்கு மிளகு உதவியாக உள்ளது.
- ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் தினமும் மிளகு சாப்பிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.
Related : பாலக் கீரையின்(பசலை கீரை) நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்
மிளகின் மருத்துவ குணங்கள்

- வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு மிளகு நல்ல மருந்தாகும், மற்றும் மலசிக்கல் , அமிலச்சசுரப்பு போன்றவற்றை வராமல் மிளகு தடுக்கிறது.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிளகு நல்லது, மிளகு நம் உடலில் உள்பகுதியில் உள்ள கொழுப்பு செல்களை சிதைக்கிறது.
- உடல் பருமனை குறைக்கலாம், உடல் பருமனாவதையும் தடுக்கலாம்.
- குடல் கேன்சர் , வயிற்று புற்று நோயைதடுத்தது உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிளகு உதவுகிறது.
- சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் மிளகுடன் தேன் கலந்து சாப்பிடும் பொழுது உடனடி தீர்வு பெற மிளகு உதவுகிறது.
- நெஞ்சு சளி உள்ளவர்களுக்கும் மிளகுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் நல்லது.
- கருப்பு மிளகு பல் சிதைவு மற்றும் துவாரங்களை எதிர்த்துப் போராடவும், பல் வலிகளை குறைக்கவும் உதவுகிறது.
- ரத்த அழுத்தம் சீராக வைத்து கொள்வதற்கும் மிளகு பயன்படுகிறது.
- ஆஸ்துமா பிரச்சனைகள் வராமல் தடுக்கவும், சுவாச குழாய்களை சுத்தமாக்கவும் சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
- உடல் சூட்டால் வரும் தலை பொடிக்கிற்கு கருப்பு மிளகு, தயிர் இரண்டையும் கலந்து தலையில் தடவி அரை மணிநேரம் கழுத்து முடியே அலசினால் தலை பொடுகு இருக்காது.
0 Comments