மா, பலா, வாழை, என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக அளவில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது வாழைப்பழம் தான். “”ரஸ்தாளி , பச்சை வாழைப்பழம், செவ்வாழை , பூவன் பழம், கற்பூரவள்ளி , நாட்டு வாழைப்பழம், நேந்திரம் பழம்”‘, என வாழைப்பழத்தில் பல வகை உள்ளது. முதலில் இது தோன்றியது ஆசியாவில்தான், அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டு இருக்கிறார்கள். எந்த காலகட்டத்திலும் , எப்பொழுதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடியது இந்த பழம்.
சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இந்த வாழைப்பழம். அனைவரும் விரும்பி இப்பழத்தை சாப்பிடுவார்கள்.
Samsung 653 L, 3 Star, Frost Free, Double Door, Convertible 5-in-1 Digital Inverter
வாழைப்பழத்தின் நன்மைகள்:

வாழைப்பழத்தில்,
- பொட்டாசியம்
- வைட்டமின் ஏ1
- வைட்டமின் பி6
- வைட்டமின் பி12
- வைட்டமின் சி
- மக்னீசியம்
போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. Related : வெந்தயம் – நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்
- காலையில் உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழத்தை சாப்பிட்டால் சுறுசுறுப்பு, உற்சாகம் உடலில் நிறைந்திருக்கும்.
- மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு தினமும் இரவு சாப்பிட்டவுடன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கினால் நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். வாழைப்பழத்தில் கலோரி குறைவாக உள்ளது. எனவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடலாம்.
- ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் காலையில் சாப்பிட்டால் பலமணி நேரம் பசி எடுக்காமல் இருக்கும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதுமட்டும் இல்லாமல் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
- உடல் எடையை குறைப்பதற்கு வாழைப்பழம் ஒரு நல்ல இயற்கையான மருந்தாகும். காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டு பின்பு ,சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் , உடல் எடை விரைவில் குறையும்.
- வாழைப்பழத்தில் டிரைப்டோபன் என்ற அமிலம் ரத்தத்தில் கலந்து மூளையில் செரோட்டனின் என்ற பொருள் சுரக்கிறது. இது மூளைக்கும், நரம்புகளுக்கும் அமைதியான நிலையை கொடுத்து, அதே நேரத்தில் உற்சாகத்தையும் தருவதால் விளையாட்டில் மிகவும் உத்வேகமாக செயல்பட உதவுகிறது.
- கருவுற்றிருக்கும் பெண்கள் உடலில் சத்து தேவைகளை இது பூர்த்தி செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் மேற்கூறிய பிரச்சனைகளை போக்கலாம். நாட்டுப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.
- பச்சை வாழைப்பத்தில் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும் உதவுகிறது. பற்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பச்சை வாழைப்பழம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
- மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. நம் உடலுக்கு தினசரி தேவையான நார்சத்து 12 சதவீதம் வாழைப்பழத்தில் உள்ளது.
- பச்சை வாழைப்பழத்தில் resistant starch என்னும் மாவுசத்து அதிகம் உள்ளது, எனவே இது கரையாத நார் போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
- இது நுண்ணுயிர் கலந்த உணவு வகையே சேர்ந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடலில் நல்ல பாக்டீரியா உருவாக உறுதுணையாகிறது.
- உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது இந்த வாழைப்பழம். நேந்திரப்பழம் சருமத்தை பளபளப்பாக்கும், கேரளாவில் நேந்திர வாழைப்பழத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
Related : கேரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்பாடு நன்மைகள்
வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

- உடல் சக்தி அதிகரிப்பு: உடல் சக்தியை உடனடியாக அதிகரிக்க வாழைப்பழம் உதவுகிறது.
- மார்பகத் தகனம் குறைப்பு: வாழைப்பழம் மிதமான அமிலநிலை கொண்டது, இதனால் மார்பகத் தகனத்தை குறைக்கிறது.
- மலச்சிக்கல் தீர்வு: நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், மலச்சிக்கலுக்கு இயல்பான தீர்வாக செயல்படுகிறது.
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்: வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
- தசை முடுக்கம் தவிர்க்க: உடலின் தசை முறுக்குகளைத் தவிர்க்க பொட்டாசியம் முக்கிய பங்காற்றுகிறது.
- மனநலம் மேம்பாடு: வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபேன் மனநிலையை மேம்படுத்துகிறது.
- வயிற்றுப் புண் குணமடையும்: வாழைப்பழத்தின் மென்மையான தன்மை வயிற்றுப் புண்களை குணமாக்க உதவுகிறது.
- நீர்சத்து வழங்கும்: தண்ணீரும் கலோரியும் நிறைந்ததால் உடலை நீர்ச்சத்து குறைவின்றி வைத்துக்கொள்ள உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது: சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
- எலும்புகள் பலம் பெற: வாழைப்பழத்தில் உள்ள கொழுப்பு சத்துகள் மற்றும் கால்சியம் எலும்புகளுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன.
வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்!
0 Comments