Free   Shipping   On   Orders   Above    1500 !!

ஆப்பிள் – நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

by | Jan 28, 2025 | Tamil Articles | 0 comments

APPLE

மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது உலகின் எல்லா விதமான குளிர்ப் பகுதிகளிலும் இது வளர்க்கப்படுகிறது. இது மூன்று வண்ணங்களில் காணப்படுகிறது.சிவப்பு, இளம்பச்சை, மஞ்சள்,வெளிப்புறத்தில் வேறு வேறு வண்ணமாக இருந்தாலும் உள்புறத்தில் ஓரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் இருக்கும், அதேபோல சுவையும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும்.

இந்த பழத்திற்கு நிறைய பெயர் உள்ளது,”குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் அல்லது அப்பிள்“என அழைக்கப்படுகிறது.

Samsung 653 L, 5 Star, Frost Free, Double Door, Convertible 5-in-1 Digital Inverter

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்:

ஆப்பிள்
ஒரு நாள் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள், மருத்துவரைத் தவிருங்கள்!

இதில் உள்ள சத்துக்கள்:

  • நார்ச்சத்து
  • இரும்புச்சத்து
  • வைட்டமின்
  • சிபாஸ்பேட்
  • சர்க்கரை
  • பொட்டாசியம்
  • அமிலம்
  • சோடியம்
  • புரோட்டின்கள்

ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் பழங்களில் ஒன்று இந்த பழம்.

Related :வாழைப்பழம்-நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்

  1.   ஆப்பிள் பழத்தில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிறதோ அதே அளவு பழத்தின் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது, இதய ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது.( இந்த பழத்தை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும்.)
  2. இந்த பழத்தில் உள்ள நார்சத்து குறைக்கக்கூடிய தன்மை அதிகமாக உள்ளதால் , கெட்ட  கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கும் உதவுகிறது.செரிமான மண்டலம் சீராக இயங்க செய்கிறது.உடலில் இரத்த ஓட்டத்தைஅதிகரிக்க செய்கிறது. 
  3. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிளில் உள்ளது.ஆஸ்துமா நோயாளிகளுக்கும்ஆப்பிள் பழம் தினமும் சாப்பிடுவதால் நல்லது.

ஆப்பிள் மருத்துவ குணங்கள்:

ஆப்பிள் ஜூஸ்
ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸ்; உற்சாகமான நாளுக்கு உத்தரவாதம்!

Related:ஏலக்காயின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

  1. ஆப்பிள் சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்திற்கும், மூளைக்கு நல்ல சக்தி கிடைக்கிறது.புற்றுநோய், மற்றும் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்தும் தடுக்கலாம்.
  2. நுரையீரலுக்கு தேவையான அளவில் சீராக ரத்த ஓட்டத்தை வைக்க உதவுகிறது மற்றும் நீரிழவுநோய் வராமல் தடுக்கவும் பாதுகாக்கிறது. ஆப்பிளில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-அழற்சி பண்புகள் இருப்பதால் அவை ஆஸ்துமாவை தடுக்க உதவுகின்றன.
  3. தினமும் ஒரு அரத்திப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.ரத்த சோகை பாதிப்பு இருப்பவர்களுக்கு தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் வெகுவாக ரத்த சோகை குறைத்துவிடும்.
  4. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இந்த பழத்தை வேகவைத்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு  நின்று விடும்.
  5. ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த பழம் நல்லது.
  6. எலும்புகளை வலுப்படுத்தவும் மிகவும் உறுதுணையாய் இருக்கும். பயோட்டின் ஊட்டச்சத்து இப்பழத்தில் உள்ளது, எனவே முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக ஊட்டச்சத்தாகும்.
  7. நரம்பு தளர்ச்சி நீங்கும்.நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது. முகச்சுருக்கம் , முக பொலிவுக்கு இது பயன்படுகிறது.
  8. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த பழத்தை சாப்பிடலாம். இதில் உள்ள பயோ ஆக்டிவ் சேர்மங்கள் குடலில் நல்ல பாக்டிரியாக்களை அதிகரிக்க செய்கிறது.
  9. இந்த பாக்டிரியாக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து , உடல் எடை குறைக்க உதவுகிறது.

LG 139 cm (55 inches) 4K Ultra HD Smart OLED TV 55B3PSA (Black)

Written By Santhiya Promoth

undefined

Related Posts

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மா, பலா, வாழை, ஆகிய தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் மாம்பழம் தேசிய பழமாக உள்ளது. மாம்பழத்தின் பூர்விகம் இந்தியாதான். உலகிலேயே இந்த பழம் தான் மற்ற எல்லாம்...

read more
வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

மனிதனின் மூளைக்கு மிகச் சிறந்த வலிமை தரக்கூடியது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரி என்பது ஒரு கொடி வகைகளை சார்ந்தது. சீனாவில் வெள்ளரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இது பச்சையாக சாப்பிடக்கூடிய ஒரு காய் வகையாகும். வெள்ளரிக்காய் விட அதன் பிஞ்சு கொஞ்சம் சுவை அதிகமாக...

read more
உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்தது பெறும் மாவுப்பொருள் நிறைந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிழங்கு வகையாகும். அதிகம் பயிர் செய்யப்படும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது உருளைக்கிழங்கு உள்ளது."மண்ணுக்கு...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop