Free   Shipping   On   Orders   Above    1500 !!

ஏலக்காய் ஸ்நாக்ஸ் ரெசிபிகள்

by | May 24, 2025 | Cardamom | 0 comments

ஏலக்காய் ஸ்நாக்ஸ்

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், பலர் உடல் நலத்தையும் சுவையையும் சமன் செய்ய முயற்சி செய்கிறார்கள். உணவில் சத்துக்கள் குறையாமல், சுவையுடன் இருக்க வேண்டுமென்றால் இயற்கைச் சுவையூட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், ஏலக்காய் என்பது தமிழர் சமையலில் பண்டைக்காலம் முதல் முக்கியமான பங்கு வகிக்கிறது. இது ஒரு வாசனை மசாலா மட்டுமல்ல; பல மருத்துவ நன்மைகளும் கொண்டது. ஏலக்காய் ஸ்நாக்ஸ் வகைகள் உடலுக்கு வலிமை தருகிறது.

இந்த கட்டுரையில், ஏலக்காயின் பயன்கள், அதன் உணவுப் பயன்பாடு, மேலும் அதை கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பல வகையான ஸ்நாக்ஸ்களை விரிவாக பார்ப்போம்.

சமையலறையில் ஏலக்காயைப் பயன்படுத்தும் சில யோசனைகள்

1. டீ மற்றும் பாலில் வாசனைக்காக சேர்க்கப்படுகிறது.

2. இனிப்பு வகைகளில் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது.

3. ஆரோக்கிய உணவுகளில் வாசனையை அதிகரிக்க பயன்படுகிறது.

4. பக்கோடா, சுவீட் கொழுக்கட்டை, கேக் வகைகளிலும் ஏலக்காயை பயன்படுத்தலாம்.

Shop now: இடுக்கி ஏலக்காயை tastesy.in ல் ஆர்டர் செய்யுங்கள்.

ஏலக்காயுடன் செய்யக்கூடிய வீட்டு ஸ்நாக்ஸ் வகைகள் 

1. ஏலக்காய் பால் உருண்டை
ஏலக்காய் பால் உருண்டை

தேவையான பொருட்கள் :

  • பால் பவுடர் – 1 கப்
  •  பால் – ½ கப்
  • சர்க்கரை – ¾ கப்
  • ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
  • நெய் – 1 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த திராட்சை, பாதாம் – விருப்பத்திற்கேற்ப 

செய்முறை:

  1. முதலில் வாணலியில் நெய் ஊற்றி  திராட்சை, பாதாமை வறுத்து கொள்ளவும்.
  2. பால், பால் பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
  3. ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறியதும் வற்ற வைக்கவும்.
  4. பின்பு சிறிது சூடு ஆறியதும் உருண்டையாக பிடித்து கொள்ளவும்.

இந்த ஏலக்காய் பால் உருண்டை; இனிப்பு விருப்பம் உள்ளவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

2. ஏலக்காய் ரவா கேக்
ஏலக்காய் ரவா கேக்

தேவையான பொருட்கள்:

  • ரவா – 1 கப்
  • தயிர் – ½ கப்
  • வெல்லம் அல்லது சீனி – ¾ கப்
  • ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

  1. முதலில் ரவாவை வறுத்து தயிர், சீனி சேர்த்து கிளறவும்.
  2. ஏலக்காய்தூளை சேர்த்து நன்றாக பிசையவும்.
  3. சற்று நேரம் ஊறவைக்கவும். 
  4. பின்பு கேக் வடிவ தட்டில் வைத்து இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைக்கவும்.

ஏலக்காய் ரவா கேக் வெறும் 15 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும்.

3. ஏலக்காய் உருண்டை (Cardamom Laddu)
ஏலக்காய் உருண்டை

தேவையான பொருட்கள்:

  • உளுந்து மாவு – 1 கப்
  • வெல்லம் – ¾ கப்
  • நெய் – 2 ஸ்பூன்
  • ஏலக்காய்தூள் – ¼ டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – ¼ கப்

செய்முறை:

  1. உளுந்து மாவை நன்றாக வறுக்கவும்.
  2. வெல்லத்தை கரைத்து வடிகட்டி மாவில் சேர்க்கவும்.
  3. பின்பு நெய், தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டையாக்கவும்.

ஏலக்காய் உருண்டை என்பது ஏலக்காயின் வாசனை, வெல்லத்தின் இனிமை இரண்டும் ஒன்றாக சேரும்  சத்தான ஸ்நாக்ஸ் ஆகும்.

4. ஏலக்காய் பானக்கம்
ஏலக்காய் பானக்கம்

தேவையான பொருட்கள்:

  • வெல்லம் – ½ கப்
  • தண்ணீர் – 2 கப்
  • இஞ்சி – சிறிது
  • ஏலக்காய்தூள் – ½ டீஸ்பூன்
  • இளநீர் – விருப்பத்திற்கேற்ப 

செய்முறை:

வெல்லத்தை கரைத்து, இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலந்து பருகலாம். சோம்பும் சேர்த்தால் கூடுதல் சுவை தரும்.

இது மூச்சுப் பிரச்சனை, உடல் வெப்பம் குறைக்கும் இயற்கையான பானம்.

5. ஏலக்காய் அவல் மிக்ஸ்
ஏலக்காய் அவல் மிக்ஸ்

தேவையான பொருட்கள்:

  • அவல் – 1 கப்
  • வெல்லம் – ½ கப்
  • தேங்காய் துருவல் – ½ கப்
  • ஏலக்காய்தூள் – ¼ டீஸ்பூன்
  • நெய் – 1 ஸ்பூன்

செய்முறை:

1. அவலை சிறிது நெய்யில் வறுக்கவும்.

2. அதில் வெல்லத்தை கரைத்து சேர்க்கவும்.

3. பின்பு தேங்காய், ஏலக்காய் தூளை கலந்து கிளறி பரிமாறவும்.

இது குழந்தைகளுக்கு நியூட்ரிஷியசாகும் ஸ்நாக்ஸ், விரைவில் செய்து விடலாம்.

ஏலக்காயுடன் ஸ்நாக்ஸ் செய்வதற்கான பயன்கள்

ஏலக்காயை ஸ்நாக்ஸ்களில் சேர்ப்பதன் மூலம் பலவிதமான நன்மைகளை பெறலாம்.

  •  முதன்மையாக, இது ஒரு இயற்கையான வாசனை மசாலா என்பதால், செயற்கை எசன்ஸ் போன்ற இரசாயனங்களைத் தவிர்க்க முடிகிறது. வாசனை மற்றும் சுவையில் எந்தவிதமான குறைவும் இல்லாமல், இயற்கையாகவே மனதைக் கவரும் சுவையை தருகிறது. 
  • இது குழந்தைகளுக்கும் மிகச் சிறந்தது, ஏனெனில் தூள் வடிவில் பால் அல்லது இனிப்பு வகைகளுடன் எளிதாக கலந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வாய்வெறித்தல் (நுரையுடன் கூடிய உமிழ்நீர் வாயிலிருந்து வெளியேறுதல்), செரிமானக்குறைபாடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கிறது.
  • மேலும், வயதானோருக்கும் இது மிகவும் நன்மை தரக்கூடியது. ஏலக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கிறது, வாய்வாசனையை குறைக்கிறது என்பதால், பெரியவர்கள் தினமும் சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் இதை சேர்த்தல் உடல் நலத்திற்கு பயனளிக்கும். 
  • ஏலக்காயை கலப்பதும் மிகவும் எளிது, ஏனெனில் மிகச் சிறு அளவிலேயே இது உணவின் முழு வாசனையையும் மாற்றக்கூடிய தன்மையை கொண்டது. இதனால் விரைவாகவும் எளிதாகவும் பல வகையான ஸ்நாக்ஸ் செய்ய முடிகிறது.
  •  மேலும், ஏலக்காயுடன் செய்யப்பட்ட உருண்டை, லட்டு போன்ற இனிப்பு வகைகள் 5 முதல் 7 நாட்கள் வரை வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்படலாம். இது  பாதுகாப்பான மற்றும் நீண்டநாள் வைத்திருக்கும் ஆரோக்கிய ஸ்நாக்ஸாக அமைகிறது.

ஏலக்காயை உணவில் சேர்க்கும் விதம் 

  • தூளாக்கி இனிப்புகளில் சேர்த்தல் 
  • சூடான பானங்களில் ( பால், டீ )
  • வறுக்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளில் வாசனைக்காக 
  • உருண்டை வகைகளில் 
  • பாக்கு மற்றும் பான வகைகளில் 

சுருக்கம் 

ஏலக்காயுடன் வீட்டு ஸ்நாக்ஸ் செய்வது என்பது வெறும் சுவைக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கும் பயனளிக்கிறது. இன்று கிடைக்கும் பல செயற்கை ஸ்நாக்ஸ் உணவுகளை தவிர்த்து, இயற்கையான வாசனை, சத்துள்ள ஏலக்காயுடன் செய்யப்படும் இந்த விதவிதமான ஸ்நாக்ஸ் வகைகளை வீட்டிலேயே செய்து குடும்பத்தோடு அனுபவிக்கலாம். 

“இயற்கையை வாழ்வில் சேர்த்தாலே நம் நலம் உறுதி” ஒரு சிறிய ஏலக்காயும் நம் உணவுக்கும் ஆரோக்கியத்திற்கும் உறுதியை தரும். 

மேலும் அறிய : ஸ்நாக்ஸ் ரெசிபிகள்

Written By Santhiya Promoth

undefined

Related Posts

வெயிலில் சுகம் தரும் 5 ஏலக்காய் பானங்கள்

வெயிலில் சுகம் தரும் 5 ஏலக்காய் பானங்கள்

வெயிலின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடலின் நீர் சுரப்பு அதிகரித்து, உடல் சோர்வு, நீரிழப்பு, தலையிளக்கம், ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இயற்கை மூலிகைகள் கொண்ட பானங்கள் உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை....

read more
ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

பாரம்பரிய இந்திய மருத்துவத்தில், இயற்கை மூலிகைகளும் மசால் பொருள்களும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அவை உணவில் சுவையையும், உடலில் ஆரோக்கியத்தையும் சேர்க்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில், ஏலக்காய் ஒரு சிறப்பான தாவர மூலிகையாக பார்க்கப்படுகிறது. இதன்...

read more
ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

இந்தியாவின் சமையல் கலாச்சாரம், மருத்துவ துறை மற்றும் வாசனைபொருள் உற்பத்தியில் ஏலக்காயின் பங்கு மிக முக்கியமானது. “மசாலா பொருட்களின் ராணி” என்று அழைக்கப்படும் ஏலக்காய், சிறிய விதையாக இருந்தாலும் உலகளாவிய சந்தையில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *