மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மா, பலா, வாழை, ஆகிய தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் மாம்பழம் தேசிய பழமாக உள்ளது. மாம்பழத்தின் பூர்விகம் இந்தியாதான். உலகிலேயே இந்த பழம் தான் மற்ற எல்லாம் பழங்களையும் விட கூடுதலாக மக்கள் உண்ணும் பழமாகும். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது.
மாம்பழத்தின் சத்துக்கள்:

- கால்சியம்
- சோடியம்
- பொட்டாசியம்
- வைட்டமின் ஏ
- பாஸ்பரஸ்
- இரும்பு சத்து
- நார்சத்து
- மெக்னீசியம்
- காப்பர்
Related: ஆப்பிள் – நன்மைகள் மற்றும் மருத்துவ பயன்கள்
மாம்பழத்தின் நன்மைகள்:

Related:உருளைக்கிழங்கு – நன்மைகள்
- மாம்பழம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள வெப்பத்தை குறைப்பதற்கும் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.அதுமட்டும் இல்லாமல் உடல் சூட்டை அதிகரிக்க செய்யாமல் பாதுகாக்கும்.
- ஆண்களுக்கும், பெண்களுக்கும் மலட்டு தன்மை இருந்தால் மாம்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் காலையில் இதை சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும்.
- மாம்பழத்தில் உள்ள வைட்டமின்கள் , மெக்னீசியம் , மற்றும் பொட்டாசியம், போன்ற சத்துக்களால் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இயற்கைய மருந்தாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது மிகவும் நல்லது.
- அமில சுரப்பு போன்ற பிரச்சனைகளை, அஜீரண பிரச்சனைகளுக்கும் மாம்பழம் சாப்பிடுவதால் சரியான ஜீரணத்திற்கு ஒரு நிவாரணியாக இருக்கிறது.மாம்பழத்தில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் பிரச்சனைகளுக்கும் இப்பழத்தை சாப்பிடுவது பயனுள்ளது.

- இளம் வயதினருக்கு முகத்தில் ஏற்படும் சுருக்கத்திற்கும் நீக்கி முகம் பளபளப்பாக இருப்பதற்கும், முக பருக்கள் வருவதை தடுக்கிறது,கரும்புள்ளிகளை நீக்கவும்,சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் மாம்பழம் பயன்னுள்ளதாக இருக்கிறது.
- மாம்பழத்தில் அதிக அளவு கரையக்கூடிய நார்சத்து இருப்பதால் , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் ஏ சத்து மாம்பழத்தில் அதிகம் இருப்பதால் சத்து குறைபாடால் ஏற்பாடு கற்புரை , பார்வை மங்குதல், போன்ற பிரச்சனைகளுக்கும், கண் பார்வை தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கும் இது பெரிதும் உதவுகிறது.
- உடல் எடை அதிகரிக்க தினமும் மாம்பழத்தை சாப்பிடுவதால் வேகமாக எடையை அதிகரிக்க செய்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ,இந்த பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கஉதவுகிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கி , கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீக்கவும் மாம்பழம் மிகவும் பயனுள்ளதாகும்.
0 Comments