உலர்திராட்சை என்பது உலர்ந்த வகை திராட்சைச் சேர்ந்ததாகும். இந்த உலர்ந்த திராட்சை பச்சையாகவோ , அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இவை உலகின் பல பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. திராட்சைப் பழங்களிலேயே “உயர் தரமான திராட்சையை”பதம் பிரித்து உலர்த்தி தயாரிக்கப்படுவது தான் உலர்திராட்சை ஆகும். கருப்பு, மற்றும் தங்கநிற உலர்திராட்சை, என இரண்டு வகை உள்ளது. (திராட்சை வத்தல் எனவும் அழைக்கப்படுகிறது) பெரும்பாலும் உலர் திராட்சைகள் விதைகள் இல்லாத திராட்சைகளை மட்டும் பயன்படுத்திக்கின்றனர். “பாயசம், பொங்கல் கேசரி, இனிப்பு பண்டங்களில்”அதிகமாக சேர்க்கப்படுகிறது.
உலர்திராட்சை நன்மைகள்:

Related : பாகற்காயின் பயன்களும்,அதன் மருத்துவ குணங்களும்
பச்சை திராட்சைகளை விட உலர் திராட்சியில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அவை
- வைட்டமின்
- தாதுக்கள்
- ஆக்சிஜனேற்றிகள்
- நார்ச்சத்து
- ஃபோலிக் ஆசிட்
- இரும்பு சத்து
- கரோட்டீன்கள்
- சுண்ணாம்புசத்து
- கால்சியம்
- பொட்டாசியம்
- மக்னேசியம்
- உலர்திராட்சையை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்று பிரச்சனையும் இருந்து விடுபடலாம். இந்த உலர் திராட்சை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம்.
- உலர் திராட்சை வெகு நாட்களுக்கு கெடாமல் அப்படியே இருக்கும். இதில் நார்சத்து அதிகமாக இருப்பதால் தண்ணீரில் போட்டவுடன் பெரிதாக விரிவடையும்.
- உடல் எடை அதிகரிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீரில் உலர் திராட்சை ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
- செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும். அதுமட்டும் இல்லாமல் உடலில் உள்ள தேவையற்றநச்சுக் கழிவுகள் வெளியேற்றவும் உதவுகிறது, அதனுடன் இதய துடிப்புகளை சீராகிறது
- சருமம் பொலிவாக்கவும், கண் பார்வை குறைபாடு இருப்பவர்களுக்கும், முதுமை காலத்தில் உடல் சோர்வுக்கும்உடல் வெப்பநிலையை சீராக வைப்பதற்கும் உதவுகிறது.
உலர்திராட்சையின் மருத்துவ குணங்கள்:

ரத்த சோகை , ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு தினமும் இரவு கருப்பு உலர்திராட்சை ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் ரத்த சோகை மற்றும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
- பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் பிரச்சனைகளுக்கு உலர்திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- மாதவிடாய் களங்களில் வயிறுவலி , மார்புவலி , இடுப்புவலி , கால்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இவை இயற்க்கை மருந்தாக இருக்கிறது.
- பெண்கள் தினமும் உலர்திராட்சை சாப்பிட்டு வந்தால் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் உலை திராட்சைகளை வெந்நீரில் போட்டு குடிக்கலாம். உடம்பில் இரும்பு சத்து அதிகரிக்கும். குடல் புண் , வாய்ப்புண், வயிற்று வலி, உடல் சூடுபோன்ற பிரச்சனைகளுக்கும் குணப்படுத்தும்.
- ரத்தம் ஊறுவதற்கு, ரத்தம் சுத்தப்படுத்தவும் அதிக நன்மை கொண்டது, எலும்புகள் நன்றாக உறுதியாக இருப்பதற்கும் , பற்கள் உறுதிக்கும் உலர்திராட்சி மிகவும் பயனுள்ளது.
- உலர்திராட்சையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் ,குழந்தையின்மை பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குறது. கர்ப்பிணிப் பெண்கள் உலர்திராட்சை பழங்களை பாலில் கலந்து குடிக்கும் பொழுது குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
Related: பூண்டின் மருத்துவ குணங்கள்
0 Comments