சுண்டலில் கருப்பு சுண்டல் மற்றும் வெள்ளை சுண்டல் என இரண்டு வகைகள் உள்ளன. கொண்டைக்கடலை என்பது பேபேசி குடும்பத்தைச் சேர்ந்த பருப்பாகும். இது இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. உலகளவில் கொண்டைக்கடலையின் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. மகாசிவராத்திரி, சரஸ்வதி பூஜை போன்ற இந்து திருநாட்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் கிடைக்கும் முக்கிய சிற்றுண்டிகளிலும் இது முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
அதிக அளவில் கருப்பு சுண்டல் சமையலுக்கு பயன்படுத்தபடுகிறது. ஏனெனில் வெள்ளை சுண்டலை விட கருப்பு சுண்டலில் அதிகம் சத்துக்கள் இருப்பதாக நினைக்கின்றன.
Samsung 12 kg, 5star, AI Ecobubble, Super Speed, Wi-Fi, Hygiene Steam with Inbuilt Heater
சுண்டலின் நன்மைகள்:

சுண்டலில்
- இரும்பு சத்துக்கள்
- கனிமம்
- நார்சத்து
- வைட்டமின்
- புரதம்
போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.
Related:கேரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்பாடு நன்மைகள்
- இதில் கொழுப்பு குறைவாக உள்ளதால் தினமும் சாப்பிடலாம். புரதம் சத்து அதிகமாக உள்ளதால் இறைச்சிக்கு மாற்றாகக் சுண்டல் கருதப்படுகிறது. எனவே தினமும் சாப்பிட்டால் புரதம் சத்து குறைபாடு நீங்கும்.
- கொண்டைக் கடலையில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது, எனவே உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கிறது.
- கொண்டைக் கடலையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்து உள்ளதால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க செய்கிறது. பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்கள் சுண்டலிலும் நிறைந்துள்ளது.
- கருப்பு சுண்டலில் நார்சத்து அதிகம் உள்ளதால் இவை உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் உதவுகிறது.
- நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கும், ரத்த சோகையை உள்ளவர்களுக்கும், கருப்பு சுண்டலை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்லது.
- ரத்த சோகை வராமல் இருப்பதற்கும் வாரத்திற்கு இரண்டு முறை சுண்டல் வேக வைத்து சாப்பிடலாம். வாத நோய் உள்ளவர்கள்,மூல நோய் உள்ளவர்கள்,மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது.
- பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது.
- முளை கட்டிய சுண்டலை சாலட்டுகளில் சேர்க்கப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் வறுத்து பொடி செய்து நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து காப்பியாகப் பயன்படுத்தலாம்.

Related:ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்
சுண்டலில் கரையும் நார்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கருப்பு கொண்டைக் கடலையே ஊற வைத்து விட்டு , காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த சுண்டலை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது, சுண்டலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே நமக்கு கிடைக்கும்.
0 Comments