பாகற்காயின் தாயகம் இந்தியா, பாகற்காய் செடியிலும், கொடியிலும் வளரக்கூடிய காயாகும். பாகற்காயில் இரண்டு வகைகள் உள்ளன, அளவிலும் வடிவத்திலும் இவை வேறுபடுகின்றன. விவசாயம் செய்பவர்கள் இரண்டு வகை இனங்களையும் வேளாண்மை செய்கின்றனர். ஒன்று 6-10 cm அளவு இருக்கும், இதனை குருவித்தலை பாகற்காய் என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவிலும் , வங்காள தேசத்திலும் அதிகம் பயன்படுத்த படுகின்றது. மற்றொன்று பெரிதாக நீளமாக இருக்கும். கொம்பு பாகற்காய் என்று அழைக்கப்படுகிறது.இவை இந்தியாவிலும் , சீனாவிலும் அதிகம் பயன்படுத்த படுகின்றது, இருப்பினும் இந்தியாவிலும் சீனாவிலும் வேறுபட்டு இருக்கின்றன.
Related: Broccoli Poriyal: A Delicious and Healthy Twist on a South Indian Classic
இந்தியாவில் அடர்பச்சை நிறமாகவும், முனைகள் கூராக இருக்கும். சீனாவில் வெளிர் பச்சை நிறத்திலும் முனைகள் மழுங்கியும் இருக்கிறது. இந்த பாகற்காய் அதிகம் கசப்பு தன்மை கொண்ட காயாகும். எனவே அதிகம் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இந்த பாகற்காய் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று தெரியதால் இதுவரை பாகற்காய் விருப்பதவர்கள் கூட இனி விரும்பி சாப்பிடுவார்கள்.
பாகற்காயின் நன்மைகள்:

பாகற்காயில் எண்ணற்ற நன்மைகள் அடங்கி உள்ளவை: பாகற்காய் என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு வருவது அதன் கசப்பு தன்மை ஆகும். இதில் உள்ள சத்துக்கள் தெரிந்து கொண்டால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- வைட்டமின் பி
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- வைட்டமின் பி 12
- இரும்பு சத்து
- பொட்டசியம்
- மெக்னீசியம்
- பீட்டா -கரோட்டின்
- ஜிங்க்
போன்ற சத்துக்கள் பாகற்காயில் அடங்கியுள்ளது. பாகற்காயில் ஊறுகாய் , பொரியல் , குழம்பு, வறுவல் கூட்டுபோன்று ஏராளமான உணவு வகைகளை செய்யலாம். ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் பாகற்காய் சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும். வண்டல் மண் பகுதிகளில் பாகற்காய் அதிகம் நன்கு விளைச்சல் அடையும்.
கொடி வகையை சேர்ந்த பாகற்காய் வெப்பப் பிரதேச காயாகும். இக்கொடி வெள்ளரிக்காய் , பூசணிக்காய் முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
பாகற்காயின் மருத்துவ குணங்கள் :

Related : பச்சைப் பயிறு நன்மைகள், மருத்துவ குணங்கள்
- பாகற்காய் ஜூஸ் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
- பாகற்காயின் நன்மைகள் –ரத்த அழுத்தம் குறையும், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் சாப்பிடுபவர்களுக்கு உடலின் செரிமான மண்டலத்தை தூண்டப்பட்டு உண்ணும் உணவு நன்றாக செரிமானம் அக்கா செய்கிறது.
- பாகற்காயின் நன்மைகள் –உடல் சூடு குறைவதற்கும் தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடித்த வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- வயிற்றில் உள்ள குடற்புழுக்களை வெளியேற்றும், நச்சு தன்மை வெளியேற்றும், ரத்தத்தை சுத்திகரிக்கும்.
- பாகற்காயில் நார்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் மூலம்,மலச்சிக்கல் பிரச்சனைகளையும் விரைவில் தீர்வு கிடைக்கும்.
- பாகற்காயின் நன்மைகள் – சாப்பிடுவதால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கு மிகவும் உதவுகிறது.
- பாகற்காயின் நன்மைகள் – இயற்கையாகவே அதிகம் கசப்பு, அமிலத்தன்மை கொண்டது. இவை ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை உற்பத்தி அதிகரிக்க செய்கிறது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக்கிறது.
- பாகற்காயின் நன்மைகள் – உள்ள வைட்டமின் சி , ஏ சத்துக்களால் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
- சொறி, சிரங்கு ,மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்களுக்கும் பாகற்காய் இலையை நன்கு அரைத்து உடல் முழுவதும் தடவினால் இவை குணமாகும்.
- பாகற்காயை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா,சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
- பாகற்காயின் நன்மைகள் -தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் முக பொலிவுக்கும் ,சருமத்தில் உள்ள பருக்கள்,கருப்பு தழும்புகள் நீங்கும். உடல் சூட்டை குறைப்பதற்கு பாகற்காய் ஜூஸ் நல்லது.
Digiocraft Proshot V4 Teleprompter for iPhone, Ipad, Smartphone, DSRL Camera with Remote Control
பாகற்காய் (Bitter Gourd) – ஒரு ஆரோக்கியத்தின் குமரன்!
பாகற்காய் தமிழில் பரவலாக அறியப்படும் ஒரு சுவை குறைந்த காய் என்பதால், எல்லோருக்கும் இதை சாப்பிட விருப்பமாக இருக்காது. ஆனால் இது ஒரு இயற்கை மருந்தாக செயல்படுகிறது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.
பாகற்காயில் உள்ள முக்கிய சத்துக்கள்
இன்சுலின் போன்ற கூட்டுபொருட்கள்: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
- வைட்டமின் C: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- நார்ச்சத்து (Fiber): செரிமானத்தை மேம்படுத்தும்.
- ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள்: உடலிலுள்ள நச்சுகளை நீக்கும்.
- ஐரன் மற்றும் பீட்டா-கரோட்டின்: இரத்தத்தை சுத்தமாக்கி, தோலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
0 Comments