Free   Shipping   On   Orders   Above    1500 !!

பச்சை மிளகாய் தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

by | Jan 25, 2025 | Blog, Food, Indian Food | 0 comments

பச்சை மிளகாய் தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள் -மிளகாயில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காப்படுகிறது. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடைமிளகாய், என மூன்று வகைகளைக் கொண்டது. பச்சை மிளகாய் என்று சொன்னவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது என்னவோ அதன் காரம் தான். பச்சை மிளகாயில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் , நார்சத்துக்களும் பச்சை மிளகாயில் உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். பச்சை மிளகாய் சேர்த்த காரசாரமான உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். Related : சின்ன வெங்காயம் நன்மைகள்

அளவுக்கு அதிகமாகவும் உணவில் சேர்த்து கொள்வது தவறாகும். பச்சை மிளகாய் காரம் அதிகம் இருப்பதால் அதிகம் சாப்பிடாமல் ஒதுக்குவது உண்டு…..

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் என்று கீழே பார்ப்போம்,

பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்:

Green chili Serrano pepper (Capsicum annuum) isolated on a white background.
  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் கே
  • இரும்பு சத்து
  • நார்சத்து
  • ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
  • பொட்டாசியம்
  • மெட்டபாலிசம்
  • சிலிகான்

FACESCANADA Ultime Pro Makeup Fixer, 50 Ml 

பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள்:

பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள்
Green chillies isolated on white background.
  • பச்சை மிளகாயில் மிக குறைந்த அளவில் கலோரிகள், அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க, தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை குறைக்க பச்சை மிளகாய் உதவுகிறது.
  • பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள் சளி , இருமல் பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவில் உணவில் பச்சை மிளகாய் சேர்த்து கொண்டால் அவை சளியின் வீரியத்தை குறைக்க உதவும். பச்சை மிளகாய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. Related : பாகற்காயின் பயன்களும்,அதன் மருத்துவ குணங்களும்

  • இயற்கையாகவே பச்சை மிளகாயில் நோய் எதிர்ப்பு சக்தி ,புற்றுநோய் எதிர்ப்பு சக்தியே, அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தின் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க மற்றும்  பராமரிக்கவும் உதவும்.
  • சருமத்தில் எண்ணெய் சுரப்பதற்கும் உதவி புரிந்திடும். நல்ல ஆரோக்கியமான சருமத்தை பெறவும் உதவும். வயதான தோற்றம் பிரச்னை வராமல் பாதுகாக்கிறது. பச்சை மிளகாய் தோல் வியாதி, மற்றும் தலைவலி , மூட்டுவலி ஆகியவற்றையும் போக்க நல்ல மருந்தாகும்.
  • பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள் உடல் எடையே குறைக்க பச்சை மிளகாய் பெரிதும் பயன்படுகிறது. பச்சை மிளகாயில் உள்ள நார்சத்து காரணமாக நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் செரிமானம் அடைவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பச்சை மிளகாய் ஒரு சுவையான உணவு பொருளாக மட்டுமின்றி, உடல் நலத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. இதோ அதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:

பச்சை மிளகாயில் உள்ள நன்மைகள்
fresh chili on white background
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
  • செரிமானத்தை மேம்படுத்தும்
  • உடல் எடை கட்டுப்படுத்தும்
  • இதய ஆரோக்கியம்
  • சரும ஆரோக்கியம்
  • ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
  • மனநலத்தை மேம்படுத்தும்
  • நச்சுகளை நீக்கும்

Related : பூண்டின் மருத்துவ குணங்கள்

எப்படி உட்கொள்ள வேண்டும்?

பச்சை மிளகாயை உங்கள் உணவில் சேர்க்கலாம். மிதமான அளவு உட்கொள்வது சிறந்தது, ஏனெனில் நீங்கள் அதிகமாக சாப்பிடுவது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனையின்படி, உங்கள் உடலில் உள்ள ஆரோக்கியக் காரணிகளின் தன்மையை அதிகரிக்க பச்சை மிளகாயை உணவில் சேர்க்கலாம்.

பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேம்படும்!

Written By Ranjitha Sekar

undefined

Related Posts

வெந்தயம்- சுவைக்கும் நலனுக்கும்

வெந்தயம்- சுவைக்கும் நலனுக்கும்

வரலாற்றுப் பின்னனி           வெந்தயம் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பொருளாகும். மத்திய கிழக்கு, இந்தியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் ஆயிரணக்கான ஆண்டுகளாக மருத்துவப்...

read more
கடுகு- சிறிய வித்தில் பெரிய சத்து

கடுகு- சிறிய வித்தில் பெரிய சத்து

         ”ஒரு கடுகு வெடிக்கிற சத்தம் தான் சமையலின் ஆரம்ப இசை” அந்த வாசனை மட்டுமல்ல, அதில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. உணவுக்கு சுவை மட்டும் அல்ல, உடலுக்கு நலம், பாட்டி வைத்தியங்களில் மருந்து,...

read more
மிளகு, சீரகம், சோம்பு-மருத்துவ குணங்கள்

மிளகு, சீரகம், சோம்பு-மருத்துவ குணங்கள்

மருத்துவ குணமிக்க மாசாலாக்கள் நம் சமையலறையில் உள்ளன..அவற்றில் முக்கியமானவை மிளகு, சோம்பு, சீரகம். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலை பாதுகாக்கும் ஒரு இயற்கையான பாதுகப்பு சுவராக செயல்படும்..  இந்த மசாலாக்கள் ஏன் முக்கியம்? அவை நமக்கு என்ன நன்மை...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *