வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள், இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. சின்ன வெங்காயம் இது தென்னிந்தியாவில் அதிகம் சமையலுக்கு பயன்படுகிறது. பெரிய மாநகரங்களில் இந்த சின்ன வெங்காயத்தை “சாம்பார் வெங்காயம்” என்றும் அழைப்பார்கள்.
Related : தக்காளி பழத்தின் நன்மைகள், மற்றும் பயன்கள்
சின்ன வெங்காயத்தில் அதிக அளவு அலைல் புரோப்பைல் டை சலஃபைட் உள்ளதால் வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு காரணமாக உள்ளது.1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சின்ன வெங்காயம் விவசாயம் செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுப்பது சின்ன வெங்காயம் தான்.
அதிகமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். வருடத்திற்கு இரண்டு முறையாவது சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை அதிக நாட்களுக்கு வைத்து வியாபாரம் செய்வதால் விவசாயிகளுக்கு நன்மை. சின்ன வெங்காயம் தரையில் மண் பகுதிக்கு கீழ்செடியின் வேர் பகுதியில் கொத்தாக விளைகிறது. Cetaphil Moisturizing Lotion for Dry to Normal, Sensitive Skin| 100 ml
சின்ன வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்:

சின்ன வெங்காயத்தில் விட்டமின் ஏ , சி அதிகமாக உள்ளது. இரும்புச்சத்து, தாதுஉப்புக்கள் , தாமிரச்சத்து , மக்னீசியம் , பாஸ்பரஸ்,பொட்டாசியம் ஆகியவை பெரிய வெங்காயத்தில் உள்ளதை விட அதிகமாக சின்ன வெங்காயத்தில் உள்ளது. கார்போஹைட்ரேட், புரதம், மினரல்ஸ் குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றையும் சின்ன வெங்காயத்தில் உள்ளது.
சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்:

Related : பாகற்காயின் பயன்களும்,அதன் மருத்துவ குணங்களும்
- “மூட்டு வலி”இருப்பவர்கள் இரவு தூங்க செய்வதற்கு முன்பாக இரண்டு சாப்பிட்டு தூங்கினால் மூட்டு வலி பிரச்னை தீர்வு கிடைக்கும். அதே போல “இரவு தூக்கம் வரவில்லை”என்று சொல்பவர்களுக்கு இரவு நேரத்தில் சின்ன வெங்காயம் சாப்பிட்டு கொஞ்சம் வெந்நீர் குடித்து வந்தால் இரவு நன்றாக தூக்கம் வரும்.
- தலைவலி அதிகம் இருப்பவர்களுக்கு சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்து நெற்றியில் தடவி கொண்டால் “தலை வலி” உடனே நீங்கும்.
- பச்சையாக வெங்காயம் சாப்பிட்டால் “ஜீரணத்துக்கு நல்ல மருந்தாகும்”.
- வெங்காயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும், மற்றும் “கெட்ட நீரை” வெளியேற்றும் தன்மை கொண்டது.
- சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் “உடலில் ஊட்டச்சத்து”அதிகரிக்கும்.“சளி பிரச்னை”அதிகம் உள்ளவர்களுக்கு தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் சளி தொல்லை நீங்கும்.
- “ரத்த சோகை” இருப்பவர்களுக்கு தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்து வருவது நல்லது.
- உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் “உடல் சூடு குறையும்”. இல்லையென்றால் நசுக்கு அதனுடன் மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
- உடம்பில் கட்டிகள் வந்தால் சுட்டு அதனுடன் சிறிது மஞ்சள் சிறிது நெய் சேர்த்து கட்டிகளின் மேல் வைத்து கட்டினால் “உடலில் உள்ள கட்டிகள்”எல்லாம் பழுத்து உடைந்துவிடும்.
- முடி அதிகம் உதிர்ப்பவர்களுக்கு கொட்டும் இடத்தில தேய்த்து ஐந்து அல்லது பாத்தது நிமிடம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் “உதிர்த்த முடி திரும்பவும் வளரும்”.
- உடம்பில் உள்ள பித்தம் குறைவதற்கு , நாலு சின்ன வெங்காயம் எடுத்து அதன் தோல்களை நீங்க்கி அதனுடன் வெல்லம் சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால்“பித்தம்”குறையும்.
முக்கிய குறிப்பு :

- “பெண்களுக்கும் மாதவிடாய்”காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கும் சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
- சுவாச கோளாறு உள்ளவனுகளுக்கும், மூச்சு திணறல் , அலர்ஜி இருப்பவர்களுக்கும் சின்ன வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனை எல்லாம் நீங்கும்.
- “ஆண்மை குறைபாடு”உள்ளவர்களுக்கும் தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்த்து கொண்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
- வெங்காயத்தில் நார்சத்தது அதிகமாக இருப்பதால் வயிற்றில் ஏற்படும்“நச்சுக்களை அழிக்க” உதவுகிறது.இரும்புச்சத்து மற்றும் செம்புச்சத்தானது இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து சீரான இரத்த ஓட்டம் நடக்க வழிவகை செய்கிறது.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பச்சையாக சாப்பிட்டு வந்தால் சின்ன வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அலிசின் சேர்மம் போன்றவை மூலம் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
- சின்ன வெங்காயம்“விஷம் முறிவுக்கு பயன்படுகிறது,தேள் கொட்டிய இடத்தில் சின்ன வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் இறங்கும்.
- சின்ன வெங்காயத்தில் கொழுப்புசத்து குறைவாக இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் நல்லது.
Staze 9to9 Lips Don’t Lie Liquid Lipstick | Matte + Transfer-proof
இவ்வளவு சத்துக்கள் கொண்ட சின்ன வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடும்போது இரட்டிப்பான நன்மையை பெற முடியும்.காலையில் சாப்பிடும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நம்முடைய உடலுக்கு தருகிறது.
0 Comments