Free   Shipping   On   Orders   Above    1500 !!

வெயிலில் சுகம் தரும் 5 ஏலக்காய் பானங்கள்

by | Jun 3, 2025 | Cardamom | 0 comments

ஏலக்காய் பானங்கள்

வெயிலின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் உடலின் நீர் சுரப்பு அதிகரித்து, உடல் சோர்வு, நீரிழப்பு, தலையிளக்கம், ஜீரண கோளாறுகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இயற்கை மூலிகைகள் கொண்ட பானங்கள் உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. அப்படிப்பட்ட ஒரு அற்புத மூலிகை தான் ஏலக்காய். இது சுவையை மட்டும் அல்லாது, நலம் தரும் பாகமும் ஆகும். இன்று நாம், வெயிலில் நமக்கு உடல்நலத்தையும் சுகத்தையும் தரும் 5 சிறந்த ஏலக்காய் பானங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏலக்காயின் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காய் பண்டைய ஆயுர்வேதம் முதல் நவீன சுகாதார அறிவியல் வரை பரிந்துரைக்கப்படும் ஒரு முக்கிய மூலிகை. இதில் பின்வரும் சத்துக்கள் அடங்கியுள்ளன.

  • எசென்ஷியல் எண்ணெய்கள் 
  • வாடகிகள் 
  • ஆன்டிஆக்ஸிடண்ட்கள் 
  • வைட்டமின்கள் A,C
  • தாதுக்கள் – இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம்  
மருத்துவ பயன்கள் 
  1. ஜீரணத்தை மேம்படுத்தும் 
  2. மூச்சுக்குழாய் சுத்தம் செய்யும் 
  3. உடல் சூட்டைக் குறைக்கும்
  4. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும்
  5. மன அழுத்தத்தை குறைக்கும் 
  6. நரம்பியல் சீராக்கும்   

ஏலக்காய் பானங்கள் 

வெயிலின் கொடூரமான வெப்பம், உடல் மட்டுமல்லாமல் மனதையும் சோர்வடையச் செய்கிறது. இத்தகைய சூழலில், ஏலக்காய் பானங்கள் நமக்கு தேவையான சக்தி, சுறுசுறுப்பு மற்றும் நன்மைகளை வழங்குகின்றன. இப்போது 5 வகையான ஏலக்காய் பானங்களை பற்றி அறிந்து கொள்வோம்.

1.ஏலக்காய் பால்பானம் 

ஏலக்காய் பால்பானம்

தேவையான பொருட்கள்:

  • பால் – 2 கப் 
  • ஏலக்காய் – 4 (பொடியாக அரைத்தது)
  • தேன் / பனங்கற்கண்டு – 1.5 மேசைக்கரண்டி 

செய்முறை 

  1. பாலை வெதுவெதுப்பாக காய்ச்சவும்.
  2. அதில் ஏலக்காய் தூள் மற்றும் பனங்கற்கண்டைச் சேர்த்து கிளறவும்.
  3. சசூடாகவும் அல்லது குளிர்ந்து பானமாகவும் பருகலாம்.

நன்மைகள்:

  • தூக்கத்தை தூண்டும்.
  • நரம்பழுத்தம் குறைக்கும்.
  • சிறுவர்களுக்கு வளர்ச்சி ஊட்டமளிக்கும்.

Shop now: ” இடுக்கி ஏலக்காய் – நாங்கள் உற்பத்தி செய்கிறோம், எங்களிடம் நேரடியாக வாங்குங்கள்!”

2. ஏலக்காய் இளநீர் பானம் 

ஏலக்காய் இளநீர் பானம் 

 தேவையானவை 

  • இளநீர் – 1 கப்
  • இளநீர் உட்பருப்பு – 2 மேசைக்கரண்டி 
  • ஏலக்காய் தூள் – 1/4 மேசைக்கரண்டி 
  • தேன் – 1 மேசைக்கரண்டி 

செய்முறை  

1.இளநீரில் ஏலக்காய் தூள் மற்றும் தேனை நன்றாகக் கலந்து கொள்ளவும்.

2. இதில் இளநீர் உட்பருப்பை சேர்த்து, மிக்ஸீயில் சற்று அடித்து சீரான பானமாக மாற்றவும்.

3. சில நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்துவிட்டு பரிமாறலாம்.

நன்மைகள் 

  • உடலில் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும்.
  • ஏலக்காய் வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு குறையும்.
  • குளிர்ச்சியான உணர்வு அளிக்கும்.

3. ஏலக்காய் தேநீர் 

ஏலக்காய் தேநீர் 

தேவையானவை 

  • தண்ணீர் – 1 கப் 
  • தேயிலைத் தூள் – 1 மேசைக்கரண்டி 
  • ஏலக்காய் – 2 ( அரைத்தது)
  • பால் – 1/2 கப் ( விருப்பம் )
  • சர்க்கரை – தேவையான அளவு 

செய்முறை :

1. தண்ணீரில் தேயிலைத் தூள் மற்றும் ஏலக்காயை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

2. பால் சேர்க்க விரும்பினால் சேர்க்கவும், இல்லையெனில் பச்சைத்தேநீராவும் பருகலாம்.

3. வடிகட்டி சர்க்கரையுடன் பரிமாறவும்.

நன்மைகள் 

  • மன அழுத்தம் குறைக்கும்.
  • ஜீரணத்திற்கு உதவும்.
  • உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

4. ஏலக்காய் லெமனேட் 

ஏலக்காய் லெமனேட் 

தேவையானவை 

  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி 
  • ஏலக்காய் தூள் – 1/4மேசைக்கரண்டி 
  • தேன் அல்லது சர்க்கரை – 1 மேசைக்கரண்டி 
  • குளிந்த தண்ணீர் – 1 கப் 
  • புதினா இலை – சிறிது 

செய்முறை 

  1. ஒரு கண்ணாடி பாட்டிலில் எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும்.
  2. பின்பு ஐஸ்க்யூப்கள் சேர்த்து குளிச்சியுடன் பருகலாம்.

நன்மைகள் 

  • உடலில் உள்ள அமில தன்மையை சமநிலைப்படுத்தும்.
  • ஏலக்காய்-எலுமிச்சை கூட்டணி டிடாக்ஸ் பானமாக செயல்படுகிறது.

5. ஏலக்காய் ஸ்மூத்தி 

ஏலக்காய் ஸ்மூத்தி 

தேவையானவை 

  • தயிர் அல்லது பால் – 1 கப் 
  • வாழைப்பழம் – 1
  • ஏலக்காய் தூள் – 1/4 மேசைக்கரண்டி 
  • ஐஸ் கட்டிகள் – விருப்பத்திற்கேற்ப 

செய்முறை 

  1. அனைத்து பொருட்களையும் மிக்ஸீயில் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  2. ஒரு கண்ணாடி டம்ளரில்  ஊற்றி புது அனுபவமாக பருகலாம்.

நன்மைகள் 

  • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கொண்டது.
  • தசை வளர்ச்சி, மூளைத்திறன் மேம்பட உதவும்.
  • சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக ஏற்றது.

ஏன் இந்த பானங்களை வெயிலில் பருக வேண்டும்?

  • வெயிலில் உள்ள வெப்பம் உடலில் நீர் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.
  • ஏலக்காய் மற்றும் இதர இயற்கை மூலிகைகள் உடல் சூட்டை தணிக்கும்.
  • இவை வயிற்றில் குளிர்ச்சி, மனதிற்கு அமைதி, நரம்புகள் சீராக செயல்பட உதவும்.

ஏலக்காய் பானங்களின் நன்மைகள்:

பானம்உடலுக்கு தரும் நன்மைபருக சிறந்த நேரம்
ஏலக்காய் இளநீர் பானம்உடல் வெப்பம் குறைக்கும், ஈரப்பதம் கொடுக்கும்மதியம்
ஏலக்காய் பால்தூக்கத்திற்கு, நரம்பு சீராக்கம்இரவு
ஏலக்காய் தேநீர்மனஅழுத்தம் குறைக்கும், ஞாபகம் மேம்படும்காலை
ஏலக்காய் லெமனேட்டிடாக்ஸ், சோம்பல் நீக்கும்மதியம்/மாலை
ஏலக்காய் ஸ்மூத்திஊட்டச்சத்து, பசிக்கேற்ற பானம்காலை/மாலை ஸ்னாக் நேரம்

முடிவுரை 

ஏலக்காயில் நறுமணமும், அதன் சத்துகளும் நாம் தினமும் பருகும் பானங்களை சுவையோடு ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் இரண்டும் ஏலக்காயின் சக்தியை ஏற்கின்றன. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இயற்கையையே நம்பும் நம்மைப் போன்றவர்களுக்கு, இந்த ஏலக்காய் பானங்கள் ஒரு சிறந்த பரிசு. இந்த 5 ஏலக்காய் பானங்களை உங்கள் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்வது, வெயிலின் தாக்கத்தை குறைப்பதுடன், உங்களை ஒரு ஆரோக்கியமான பாதையில் பயணிக்கச் செய்யும்.

“சுடும் வெயிலுக்கு சுட்டித்தனமான தீர்வு – ஏலக்காயில் குளிர்ச்சிப் பானங்கள்”

ஏலக்காய் தேநீர் பற்றி மேலும் அறிய…

Written By Santhiya Promoth

undefined

Related Posts

ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

ஏலக்காயும் ஆயுர்வேதமும்: இயற்கை நலன்களின் கூட்டு!

பாரம்பரிய இந்திய மருத்துவத்தில், இயற்கை மூலிகைகளும் மசால் பொருள்களும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அவை உணவில் சுவையையும், உடலில் ஆரோக்கியத்தையும் சேர்க்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில், ஏலக்காய் ஒரு சிறப்பான தாவர மூலிகையாக பார்க்கப்படுகிறது. இதன்...

read more
ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

ஏலக்காய் ஏற்றுமதி – உலக சந்தைக்கு பயணம்!

இந்தியாவின் சமையல் கலாச்சாரம், மருத்துவ துறை மற்றும் வாசனைபொருள் உற்பத்தியில் ஏலக்காயின் பங்கு மிக முக்கியமானது. “மசாலா பொருட்களின் ராணி” என்று அழைக்கப்படும் ஏலக்காய், சிறிய விதையாக இருந்தாலும் உலகளாவிய சந்தையில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பொருளாக...

read more
தரமான ஏலக்காய் தேர்வு செய்வது எப்படி?

தரமான ஏலக்காய் தேர்வு செய்வது எப்படி?

ஏலக்காய் என்பது இந்திய உணவுகளில் மிக முக்கியமான மசாலா பொருளாகும். இதன் வாசனை மட்டுமல்லாமல், அதில் இருக்கும் மருத்துவ நன்மைகள் காரணமாக, இதற்கு ஒரு சிறப்பான இடம் உள்ளது. இங்கு நாம் பார்க்கப்போவது, ஒரு நல்ல தரமான ஏலக்காயை எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றியது....

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *