Free   Shipping   On   Orders   Above    1500 !!

வெந்தயம்- சுவைக்கும் நலனுக்கும்

by | Jun 1, 2025 | Blog, Health | 2 comments

வரலாற்றுப் பின்னனி

          வெந்தயம் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கியமான இடத்தை பெற்றிருக்கும் ஒரு முக்கியமான பொருளாகும். மத்திய கிழக்கு, இந்தியா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் ஆயிரணக்கான ஆண்டுகளாக மருத்துவப் பயன்களுக்காகவும், சமையலுக்காகவும் பயன்பட்டுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை.

  • சிந்து சமவெளி நாகரிகத்திலேயே வெந்தய விதைகள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன.
  • ஆயுர்வாத மற்றும் சித்த மருத்துவத்தில் இது முக்கிய மூலிகையாகப் பார்க்கப்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள முக்கிய சத்துக்கள்

1.நார்ச்சத்து

  • வெந்தயத்தில் அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தைக் கட்டுபடுத்துகிறது, சர்க்கரை சதவீதத்தை குறைக்கிறது.

2. புரதச்சத்து

  • வெந்தய விதைகளில் சுமார் 20-30% வரை புரதம் உள்ளது.இது உடல் வளர்ச்சி, தசை வலிமை ஆகியவற்றுக்கு உதவுகிறது.

3.இரும்புச்சத்து

  • மாதவிலக்கு கால பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து வெந்தயத்தில் நிறந்துள்ளது.

4.வைட்டமின்கள்

  • வைட்டமின் பி6 – நரம்பியலை சீர்படுத்துகிறது.
  • வைட்டமின் சி – நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.
  • வைட்டமின் எ – கண்பார்வையை மேம்படுத்துகிறது.

5. தாதுக்கள்

  • மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் ஆகியவை உள்ளன.
  • இவை எலும்பு வளர்ச்சி, தசை செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு உதவுகின்றன.

6. ஸபோனின்கள் மற்றும் அல்கலாய்டுகள்

  • இயற்கையான கரைபூச்சிகள் எனவும் சொல்லலாம். கொழுப்பை கட்டுப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன.

தமிழ் சமையலில் வெந்தயம் எப்போது வந்தது?

ஆரியர் காலாச்சாரத்திற்கு பின்னர் ஆயூர்வேத மருந்துகளில் வெந்தயம் முக்கியபொருளாக பயன்படுத்தப்பட்டது. சங்க கால இலக்கியங்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும் இதன் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழர் சமையலில் வத்தக்குழம்பு, கிழங்கு குழம்பு, கீரை மசியல் போன்ற உணவுகளில் முக்கிய பொருளாக வெந்தயம் சேர்க்கப்பட்டது. இது ஒரு சிறிய விதையாக இருந்தாலும், அதன் சுவையும் நறுமணமும் அதனால் உணவுக்கு தனித்துவம் கிடைக்கிறது. இதுஇல்லாமல் சாம்பார், மோர்குழம்பு அல்லது கரி செய்யவே முடியது என்ற அளவிற்கு மிக முக்கியமான மாசலா !!

சுவையும் மணமும் நிறைந்த எங்களின் TASTESY ஏலக்காயை பெற்றிட -இங்கே கிளிக் செய்யவும் !!.

சமையலில் வெந்தயத்தின் இடம்- ஏன் தாளிப்பில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது?

  • எண்ணெயில் வெந்தயம் சேர்க்கும் போது ஒரு தனி மணம் கிடைக்கும்.
  • சாம்பார், மோர், குழம்பு, பருப்பு, வெஜிடேபிள் போன்றவை தாளிக்கும் போது வெந்தயம் சேர்ப்பதனால் மணமுடன் கலந்த தனிசுவை கிடைக்கும்.
  • நல்ல வெந்தய வாசனை இல்லாத மோர் குழம்பு அது தன்மையில்லாதது போலத்தோன்றும்!
  • தாளிப்பில் சேர்க்கும் போது வதங்கிய வெந்தயம் குழம்புகளில் நன்கு கரைந்து மென்மையான, வாசனை மிக்க அம்சம் ஆக மாறும்.

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்

அரிப்புக்கும், குடல் சுகத்துக்கும் நன்மை
  • வெந்தயத்தை ஒரு டம்ப்ளர் தண்ணீரில் இரவே ஊறவத்துவிட்டு காலை வெறும் வயிற்றில் குடிப்பதனால் வயிற்றுப்புண், அஜீரணம், அமிலம் அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுபடுத்தும்
  • வெந்தயம் இன்சுலின் செயல்பாட்டை தூண்டி டையபெட்டீஸ் உள்ளவர்களுக்கு நல்ல கட்டுப்பாடு தரும்.
தாய்ப்பால் அதிகரிக்க உதவுகிறது
  • கருவுற்ற பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கும் பொருளாக நம் பாட்டிகள் வெந்தயத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இன்றைய மருத்துவ ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடி வளர்ச்சிக்கும் தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வு
  • வெந்தயத்தை நனைத்து விழுது செய்து தலைக்கு தேய்த்துவந்தால் முடி வளர்ச்சி, வறண்டதன்மை குறையும்.

வெந்தயத்தை எப்பொழுது எப்படி சேர்க்கவேண்டும்?

  • தாளிக்கும் போது- குழம்பு அல்லது பொரியலுக்கு தாளிக்கும் போது எண்ணெய் சூடானதும் சிறிது வெந்தயம் வதக்கி செர்த்துக்கொண்டால் மணம் மற்றும் ருசி கிடைக்கும்.
  • உணவோடு சேர்த்து சாப்பிட- வெந்தய பொடியை இஞ்சியோட சேர்த்து கலந்து காய்கறி வருவல்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • மருந்தாக உட்கொள்ள- வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கு நல்லது உடல்சூடும் குறையும்.

தினசரி உணவில் சேர்த்து சாப்பிடும் வழிகள்

1. வெந்தய தண்ணீர்
  • 1 தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் 1கப் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும் , வெந்தயத்தை மென்று சாப்பிடலாம்.
  • இதனால் நீரழிவு கட்டுப்படும், வயிறு சுத்தம் ஆகும் மற்றும் பித்தம் குறையும்.
2. வெந்தயக்கஞ்சி
  • அரிசி மற்றும் சிறிது உளுந்துடன் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து கஞ்சி வேகவைக்கலாம்.சாம்பார் போல் உப்பும்ம் மிளகையும் சேர்த்துகுடிக்கலாம்.
  • மூட்டுவலி, உடல் அசதி குறையும். சத்து நிறைந்த காலை உணவுக்கு வெந்தயக்கஞ்சி சிறந்தது.
3. வெந்தயப்பொடி
  • வறுத்த வெந்தயத்தை அரத்துப்பொடியாக வைத்து, சாதத்தில் சிறிது எண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்.
  • உடம்பில் உள்ள அமிலம் குறையும், ஜீரண சக்தி மேம்படும்.
4.வெந்தயக்கசாயம்
  • 1டீஸ்பூன் வெந்தயத்தை 1கப் தண்ணீரில் போட்டு முக்கால் அளவாக சுண்டவிட்டு பின்பு வடிகட்டி சூடாக குடிக்கலாம்.
  • இருமல், பசியின்மை, எலும்பு வலிக்கு சிறந்தது.
5.வெந்தயஎண்ணெய்
  • வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் நன்கு சூடாக்கி வடிகட்டிப் பயன்படுத்தலாம். இதை தலைமுடிக்கு தேய்த்துவந்தால் முடி உதிர்வு குறையும். மூட்டுப்பகுதியில் வலி உள்ளவர்கள் இதை வலிநிவாரணியாகவும் பயன்படுத்தலாம்.
6.வெந்தயம்+ கருப்பட்டி குழம்பு
  • வெந்தயத்தை எண்ணெயில் வறுத்து, கருப்பட்டி மற்றும் இஞ்சி சேர்த்து குழம்பாக செய்து சாப்பிடலாம்.
  • பாகற்காய் குழம்பு போல இது பித்தநோய்களுக்கு சிறந்தது.

வெந்தய நீர்- ஒரு நவீன ட்ரெண்ட் ஆனா பழமையான மருந்து !

      இப்போது இருக்கும் health conscious ஆன உலகில் “Fenugreek water “ என்றால் எல்லோர்க்கும் தெரியும் அளவிற்கு பிரபலமாயிருக்கு.

ஆனா நம் பாட்டிகள் காலத்திலிருந்தே இதை பயன்படுத்தி வந்துள்ளனர்.

  • முதலை நோய், தோல் நச்சு, நீரழிவு மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கு வெந்தய நீர் அருமை.
  • சிறிது தேன் சேர்த்து குடிக்கலாம்.

சின்னது ஆனா சித்த மருத்துவத்தில் ஒரு பெரிய இடம்!

சித்த மருத்துவம் இயற்க்கையின் சக்திகளை மையமாகக் கொண்டு அமைந்த மரபு மருத்துவம். இதில் வெந்தயத்தின் பங்கு மிக முக்கியமானது. உள்நுரையீரல் சுத்திகரிப்பு, உடல் சூட்டைக்குறைக்கும் மற்றும் வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று வாதங்களையும் சமப்படுத்தும் மூலிகையாக கருதப்படுகிறது.

பயன்கள்
  • வாதநோய்கள் : முடக்குவாதம், மூட்டுவலி உள்ளவர்கள் வெந்தயக்கஞ்சி அல்லது வெந்தயப்பொடி போல் செய்து தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெந்தயத்தை எண்ணெய் வடிவிலும் உட்கொள்ளலாம்.
  • பித்த நோய்கள் : செரிமான கோளாறு, வெப்பம், தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயக்கசாயம் செய்துசாப்பிடலாம்.
  • கப நோய்கள் : இருமல், சளி தொந்தரவு உள்ளவர்கள் வெந்தய தண்ணீர் குடித்துவர சளி குறையும்.
  • நாடி சீராக்கம் : வெந்தயம் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு : தாய்ப்பாலை அதிகரிக்க உதவும்.
  • சர்க்கரை நோய்க்கு : வெந்தய விதைகள் இரவு ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் எடுத்தால் இன்சுலின் செயலை அதிகரிக்கும்.

முடிவுரை

நம் சமையலில் ஒரு பொடிச்சுப்பொடியாகப் போடப்படும் வெந்தயம், அதைப்பற்றி அறிவோட சேர்ந்து பார்த்தால் வெளிப்படாத நன்மைகளால் நிரப்பிய ஒரு பொக்கிஷம்.

     உணவு மட்டுமல்ல, நலம் தரும் வெந்தயத்தை தினமும் சிறிது சேர்த்தாலே, நம் உடலுக்கே ஒரு நாளும் நோய் வராது.

மிளகு, சீரகம், சோம்பு பற்றிய மருத்துவ குணங்களை அறிய …!!

Written By Ranjani Sekar

undefined

Related Posts

கடுகு- சிறிய வித்தில் பெரிய சத்து

கடுகு- சிறிய வித்தில் பெரிய சத்து

         ”ஒரு கடுகு வெடிக்கிற சத்தம் தான் சமையலின் ஆரம்ப இசை” அந்த வாசனை மட்டுமல்ல, அதில் நம் உடலுக்கு தேவையான மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளது. உணவுக்கு சுவை மட்டும் அல்ல, உடலுக்கு நலம், பாட்டி வைத்தியங்களில் மருந்து,...

read more
மிளகு, சீரகம், சோம்பு-மருத்துவ குணங்கள்

மிளகு, சீரகம், சோம்பு-மருத்துவ குணங்கள்

மருத்துவ குணமிக்க மாசாலாக்கள் நம் சமையலறையில் உள்ளன..அவற்றில் முக்கியமானவை மிளகு, சோம்பு, சீரகம். இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலை பாதுகாக்கும் ஒரு இயற்கையான பாதுகப்பு சுவராக செயல்படும்..  இந்த மசாலாக்கள் ஏன் முக்கியம்? அவை நமக்கு என்ன நன்மை...

read more

2 Comments

  1. News

    Maintaining a healthy diet is crucial for overall well-being, yet many misconceptions can make it seem daunting. The 80-20 rule is a practical approach that allows for balance and sustainability in eating habits. Diets like the Mediterranean, vegan, and keto each have unique benefits but require careful consideration of individual needs. Consulting a healthcare provider before starting a new diet ensures it aligns with your health goals. How can we better educate people to distinguish between myths and facts about healthy eating? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?

    Reply
  2. German news

    Eating healthy doesn’t have to be boring or restrictive; it’s about balance and enjoyment. The 80-20 rule seems practical, allowing flexibility without guilt. The Mediterranean diet sounds like a great option for long-term health, with its focus on wholesome ingredients. It’s interesting to see how different diets cater to various lifestyles and goals. However, how do you choose the right diet that fits both your health needs and personal preferences? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *